Saturday, 20 September 2014

அய்யா சாமி ஆவோஜி சாமி - அய்யா - ஓர் இரவு (18.05.1951)



அய்யா சாமி ஆவோஜி சாமி - அய்யா
படம் : ஓர் இரவு (18.05.1951)
பாடியவர் : எம்.எல்.வசந்தகுமாரி 
இசை : ஆர்.சுதர்சனம் 
இயற்றியவர் : கவி கு.மா.பாலசுப்ரமணியம்
[நடிப்பு : நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ஆர் - ஏ.நாகேஸ்வரராவ் 
லலிதா - பத்மினி -டி .எஸ்.பாலையா
இயக்கம் : ப.நீலகண்டன்
கதை வசனம் : அறிஞர் அண்ணா
தயாரிப்பு : ஏ.வி.எம்.
(
இப்பாடல் அன்று ஆளும் கட்சியைக்  குறித்து 
எழுதப்பட்டது..,ஆனால், இன்று முற்றிலும் 
ஜெயலலிதா கம்பெனிக்கும் பொருந்து வகையில் அமைந்துள்ளது என்பதே உண்மை..முக்காலம் உணர்ந்த கவிஞர்களின்  திறன் 
மெய்சிலிர்க்க வைக்கிறது..

ஓ சாமி
அய்யா சாமி ஆவோஜி சாமி - அய்யா
ராய்யா வாய்யா யூ கம்மையா
அய்யா சாமி ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?
அய்யா சாமி ஆவோஜி சாமி - அய்யா

ராய்யா வாய்யா யூ கம்மையா
அய்யா சாமி ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?

அய்யா சாமி ஓ அய்யா சாமி

கோழியாட்டைப் பிடிக்கும் எங்க குள்ள நரி
ஏழை ரத்தம் குடிக்கும் இங்கே உள்ள நரி
பல்லிளித்துக் காட்டி பட்டம் பதவித் தேடி
கட்சிப் பேரைச் சொல்லி ஊரை ஏமாற்றிடும்

அய்யா சாமி ஆவோஜி சாமி - ஐயா
ராய்யா வாய்யா யூ கம்மையா
அய்யா சாமி ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?

வேட்டையாடிப் பிழைக்கும் எங்க காட்டு நரி
மூட்டை கட்டிப் பதுக்கும் உங்க நாட்டு நரி
வேலை ரொம்ப வாங்கும் கூலி தர ஏங்கும்
பட்டினியைப் பாத்தும் புளி ஏப்பம் விடும்

அய்யா சாமி ஆவோஜி சாமி ஐயா
ராய்யா வாய்யா யூ கம்மையா
அய்யா சாமி ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?
அய்யா சாமி ஓ அய்யா சாமி

காட்டிலுள்ள நரி ரொம்ப நல்லதுங்க - உங்க
நாட்டிலுள்ள நரி ரொம்ப பொல்லாதுங்க
குள்ளநரிக் கொம்பைக் கோத்துப் போடு சாமி
குள்ளநரிக் கொம்பைக் கோத்துப் போடு சாமி
புள்ளைக் குட்டி யார்க்கும் நல்ல புத்தி வரும்

அய்யா சாமி ஆவோஜி சாமி ஐயா
ராய்யா வாய்யா யூ கம்மையா
அய்யா சாமி ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?

No comments:

Post a Comment