Thursday, 11 September 2014

தேசம், ஞானம், கல்வி, ஈசன் பூசையெல்லாம் - பராசக்தி (1952)



தேசம், ஞானம், கல்வி,  ஈசன் பூசையெல்லாம்
படம் : பராசக்தி (1952)
பாடியவர் : சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன்
இயற்றியவர் : உடுமலை நாராயணக்கவி 
இசை : ஆர்.சுதர்சனம்

தேசம், ஞானம், கல்வி, ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி
தேசம், ஞானம், கல்வி, ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி குதம்பாய் 
காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே குதம்பாய் 
காசுக்குப் பின்னாலே

காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி
காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி குதம்பாய் 
சாட்சிக் கோர்ட் ஏறாதடி
பை பையாய்ப் பொன் கொண்டோர் 
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய்ப் போகுமடி குதம்பாய் 
மெய் மெய்யாய்ப் போகுமடி

நல்லவரானாலும் ம்.. ம்..ம்.. ம்.. ம்..ம்.. ம்.. ம்..ம்..
நல்லவரானாலும் இல்லாதவரை 
நாடு மதிக்காது
நல்லவரானாலும் இல்லாதவரை 
நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது - கல்வி
இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே குதம்பாய் 
வெள்ளிப் பணமடியே

ஆரியக் கூத்தாடினாலும் 
தாண்டவக்கோனே 
காசு காரியத்தில் கண் வையடா 
தாண்டவக்கோனே
ஆரியக் கூத்தாடினாலும் 
தாண்டவக்கோனே 
காசு காரியத்தில் கண் வையடா 
தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா 
தாண்டவக்கோனே..
ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..
உள்ளே பகை வையடா 
தாண்டவக்கோனே  
காசுக்கு உதட்டில் உறவாடடா 
தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா 
தாண்டவக்கோனே 
காசுக்கு உதட்டில் உறவாடடா 
தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாந் 
தாண்டவக்கோனே - சில
முட்டாப் பயலையெல்லாந் 
தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா 
தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாந்
தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா 
தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் 
தாண்டவக்கோனே - 
பிணத்தைக் கட்டி அழும் போதும் 
தாண்டவக்கோனே..
ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..
கட்டி அழும் போதும் 
தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே க்ண் வையடா 
தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் 
தாண்டவக்கோனே
பணப் பெட்டி மேலே கண் வையடா 
தாண்டவக்கோனே

ஆரியக் கூத்தாடினாலும் 
தாண்டவக்கோனே 
காசு காரியத்தில் கண் வையடா 
தாண்டவக்கோனே

No comments:

Post a Comment