Tuesday, 2 September 2014

காதலின் பொன்வீதியில்..காதலன் பண்பாடினான்... - பூக்காரி (1973)



காதலின் பொன்வீதியில்..காதலன் பண்பாடினான்...
படம் : பூக்காரி (1973)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - எஸ்.ஜானகி 
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : வாலிபக் கவிஞர் வாலி 
நடிப்பு : மு.க.முத்து - வெண்ணிற ஆடை நிர்மலா 

ஆ.ஆ.ஆ..ஆ...ஆ..ஆஅ..
ஆ.ஆ.ஆ..ஆ...ஆ..ஆஅ..
ஓ.ஓ.ஓ..ஓ..ஓஓ..ஓ.ஓ.ஓ..ஓ..ஓஓ

ஆ.ஆ.ஆ..ஆ...ஆ..ஆஅ..
காதலின் பொன்வீதியில்..
காதலன் பண்பாடினான்...
பண்ணோடு அருகில் வந்தேன் - நான் 
கண்ணோடு உறவுக் கொண்டேன்..
காதலின் பொன்வீதியில்..
காதலன் பண்பாடினான்...
பண்ணோடு அருகில் வந்தேன் - நான் 
கண்ணோடு உறவுக் கொண்டேன்..

காதலில் பொன்வீதியில் 
நானொரு பண்பாடினேன்
காதலில் பொன்வீதியில் 
நானொரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள் - என் 
கண்ணோடு ஒருத்தி வந்தாள்
காதலில் பொன்வீதியில் 
நானொரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள் - என் 
கண்ணோடு ஒருத்தி வந்தாள்

திருப்பாற் கடலில் பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன் உனக்காக 
திருப்பாற் கடலில் பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன் உனக்காக 
இனி தனிமையில்லை.. 
பகல் இரவுமில்லை.. 
நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக..  

இரு பொன் மலரில் ஒன்று என் மலராம் 
தேன் கொள்ள வந்தேன் மனம் போல..
இரு பொன் மலரில் ஒன்று என் மலராம் 
தேன் கொள்ள வந்தேன் மனம் போல..
என் மனதினிலே உன் நினைவுகளே.. 
அதை அள்ளி வந்தேன் உனக்காக.. 
காதலில் பொன்வீதியில் 
நானொரு பண்பாடினேன்

விழி ஓரங்களில் சில நேரங்களில் 
வரும் பாவங்களும் கவியாகும்..

அந்த கவிதைகளில் உள்ள பொருளறிந்து
அதை சுவைப்பதுதான் கலையாகும்..

அந்த கலைகளிலும் பலப் புதுமையுண்டு 
அதைப் பழகுவதே பேரின்பம்..

இன்ப வாசலிலே ஒரு காவலில்லை 
இனி காலமெல்லாம் உன் சொந்தம் 
காதலின் பொன்வீதியில்..
காதலன் பண்பாடினான்..

பண்ணோடு ஒருத்தி வந்தாள் - என் 
கண்ணோடு ஒருத்தி வந்தாள்

ஆ..ஆ..ஆ..ஹா..ஆ..ஆ..ஆ..ஹா

ஓ..ஓ..ஹோ..

ஆ..ஆ..ஆ..ஹா

ஓ..ஓ..ஹோ..

No comments:

Post a Comment