Sunday, 21 September 2014

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை - அங்காடி தெரு (26.03.2010)



அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
படம்: அங்காடி தெரு (26.03.2010)
இசை : விஜய் ஆண்டனி - ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடியவர்கள் : வினித் ஸ்ரீநிவாஸ் - ரஞ்சித் - ஜானகி ஐயர்
பாடலாசிரியர் : நா. முத்துகுமார்
நடிப்பு : மகேஷ் - அஞ்சலி - பாண்டி - ஏ.வெங்கடேஷ் 
தயாரிப்பு : கே.கருணாமூர்த்தி - சி.அருண்பாண்டியன்
இயக்கம் : வசந்தபாலன்
வெளியீடு : ஐங்கரன் இன்டர்நேஷனல் பிலிம்ஸ்

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..
அவளுக்கு யாரும் இணையில்லை..
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை..
ஆனால் அது ஒரு குறையில்லை..

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..
அவளுக்கு யாரும் இணையில்லை..
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை..
ஆனால் அது ஒரு குறையில்லை..

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..
அவளுக்கு யாரும் இணையில்லை..
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை..
ஆனால் அது ஒரு குறையில்லை..

தனனா..னனா..னனா..தனனா..னனா..னனா..
தனனா..னனா..னனா..தனனா..னனா..னனா..
அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை..
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை..
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை..
நான் பொம்மை போலே பிறக்கவில்லை..
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..
அவளுக்கு யாரும் இணையில்லை..
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை..
ஆனால் அது ஒரு குறையில்லை..
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை..
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை..
அவள் 
கைவிரல் மோதிரம் தங்கமில்லை..
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை..
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை..
எனக்கு எதுவுமில்லை..

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..
அவளுக்கு யாரும் இணையில்லை..
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை..
ஆனால் அது ஒரு குறையில்லை..

ஆஹா..ஆஆஆ..ஆஆஆஅ..ஆஹா..ஆஆஆ..ஆஆஆஅ..
ஆஹா..ஆஆஆ..ஆஆஆஅ..ஆஹா..ஆஆஆ..ஆஆஆஅ..
ஆஹா..ஆஆஆ..ஆஆஆஅ..
அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை..
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை..
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை..
அந்த அக்கரைப்போல வேறு இல்லை..
அவள் வாசம் ரோஜா வாசமில்லை..
அவள் இல்லாமல் சுவாசமிலை..
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை..
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை..
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை..
எனக்கு எதுவுமில்லை..
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..
அவளுக்கு யாரும் இணையில்லை..
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை..
ஆனால் அது ஒரு குறையில்லை..
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

No comments:

Post a Comment