Saturday, 13 September 2014

புத்தம் புது காலை பொன்னிற வேளை - மேகா (2014)



புத்தம் புது காலை பொன்னிற வேளை
படம் : மேகா (2014)
பாடியவர் : எஸ்.ஜானகி 
இசை : இசைஞானி இளையராஜா 
வரிகள் : கங்கை அமரன் 
நடிப்பு : அஸ்வின் - சிருஷ்டி
(டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளிவந்தது)

புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ?
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ?
மனதின் ஆசைகள்..
மலரின் கோலங்கள்..
குயிலோசையின் பரிபாஷைகள்..
அதிகாலையின் வரவேற்புகள்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..

வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ?
பனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ?
வயதில் தோன்றிடும்..
நினைவில் ஆனந்தம்..
வளர்ந்தோடுது இசைபாடுது..
வலி கூடிடும் சுவைகூடுது...
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்..
லல்லலாலா..லா..லாலா..ஆ..

2 comments:

  1. இன்றைக்கும் புதுப்பொழிவோடு இருந்தாலும் எள்றைக்கும் புதுப்பொழிவுதான் இந்த புத்தம் புது காலை....

    ReplyDelete
  2. இன்றைக்கும் புதுப்பொழிவோடு இருந்தாலும் எள்றைக்கும் புதுப்பொழிவுதான் இந்த புத்தம் புது காலை....

    ReplyDelete