இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்..
கேரளா மாநிலத்தை மிகச் சிறப்பாக ஆண்டு
வந்த "மகாபலி" மன்னனின் நினைவுப் போற்றும்
திருநாள்.. ஒவ்வொரு கொல்லம் வருடம் சிங்க
மாதத்தில் (நம்மூர் ஆவணி மாதத்தில்) அத்த (அஸ்தம்)
நட்சத்திரத்திலிருந்து, திருவோணம் நட்சத்திரம்
வரையிலான பத்து நாட்களை மிகச் சிறப்பாக "வசந்த
விழாவாக" கொண்டாடப் பட்டு வருகிறது..
இவ்விழா தமிழகத்தில் பாண்டிய மன்னர் காலத்தில்
மாமதுரையில் மிகச் சிறப்பாக கொண்டாடிய வரலாற்று
செய்திகள் உண்டு..
“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”
- திருஞானசம்பந்தர், தேவாரம் 503, திருமறை 2
என சம்பந்தரின் பாடல் பெற்ற திருநாள்..
இந்நாளில் வீடுகளில் பூக்களால் "அத்தப் பூக் கோலம்"
போட்டு மகாபலி மன்னன் தங்கள் இல்லங்களுக்கு வருவதாக
எண்ணி, அன்புடன் அழைத்து மகிழும் மலையாளப் பெண்கள்..
புத்தாடை உடுத்தி, பூக் கோலமிட்டு, சுவைமிகு உணவு
வகைகள் படைத்து அவர்தம் ஆடல் பாடல்கள் நிகழ்ச்சியாக புலிக்களி, கை கொட்டுக்களி மற்றும் யானைத் திருவிழா என
வீர விளையாட்டுகள்நடத்தி மகிழும் ஓணம் திருநாள்
கொண்டாடும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்..
இவ்விழா கொண்டாடிட வசதியாக, கேரளா மாநிலத்தை
ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் ஊள்ளூர் விடுமுறை
அறிவித்து மகிழ்ந்தது தலைவர் கலைஞர் அவர்கள்..
No comments:
Post a Comment