Thursday, 25 September 2014

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது.. - பாணா காத்தாடி (06.08.2010)



என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன்
படம் : பாணா காத்தாடி (06.08.2010)
பாடியவர் : சாதனா சரகம் 
இசை : யுவன் சங்கர் இராஜா 
இயற்றியவர் : கவிஞர் நா.முத்துகுமார் 
நடிப்பு : அதர்வா - சமந்தா ருத் பிரபு 
இயக்கம் : பத்ரி வெங்கடேஷ் 
தயாரிப்பு : சத்யஜோதி பிலிம்ஸ் 

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது 
அதன் பேர் என்னவென கேட்டேன்..
என் கண்ணில் ஒரு தீ வந்தது  
அதன் பேர் என்னவென கேட்டேன்..
என்ன? அது இமைகள் கேட்டது..
என்ன? அது இதயம் கேட்டது..
காதலென உயிரும் சொன்னதன்பே..

காதலென உயிரும் சொன்னதன்பே..

என் பேரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த
பேர் என்னவெனக் கேட்டேன்..
என் தீவில் ஒரு கால் வந்தது அந்த
ஆள் எங்கு எனக் கேட்டேன்..
கண்டுபிடி உள்ளம் சொன்னது..
உன்னிடத்தில் உருகி நின்றது..
காதலென உயிரும் சொன்னதன்பே..
காதலென உயிரும் சொன்னதன்பே..

சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே ஒளி தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையாய் இல்லை
புரிந்ததும் மறந்ததேன் உன்னிடம்
என்னை நீயும் மாற்றினாய்
எங்கும் நிறம் கூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது 
அதன் பேர் என்னவெனக் கேட்டேன்..
என் கண்ணில் ஒரு தீ வந்தது  
அதன் பேர் என்னவெனக் கேட்டேன்..

உனை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை..
எதிர்க்காற்றிலேக் குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை..
இரவில் உறக்கம் இல்லை..
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்..
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்ததேனடா..
என்னை ஏற்றுக்கொள் முழுவதும்..

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது 
அதன் பேர் என்னவெனக் கேட்டேன்..
என் கண்ணில் ஒரு தீ வந்தது  
அதன் பேர் என்னவெனக் கேட்டேன்..
என்ன? அது இமைகள் கேட்டது..
என்ன? அது இதயம் கேட்டது..
என்ன? அது இமைகள் கேட்டது..
என்ன? அது இதயம் கேட்டது..
காதலென உயிரும் சொன்னதன்பே..

காதலென உயிரும் சொன்னதன்பே..

என் பேரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த
பேர் என்னவெனக் கேட்டேன்
என் தீவில் ஒரு கால் வந்தது அந்த
ஆள் எங்கு எனக் கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன்னிடத்தில் உருகி நின்றது
காதலென உயிரும் சொன்னதன்பே..

காதலென உயிரும் சொன்னதன்பே..

No comments:

Post a Comment