Sunday, 31 August 2014

அழகிய அசுரா அழகிய அசுரா - விசில் (2003)



அழகிய அசுரா அழகிய அசுரா
படம் : விசில் (2003)
பாடியவர் : அனிதா சந்திரசேகர்
இசையமைப்பாளர் : டி.இமான் 
இயற்றியவர் : தாமரை 

அழகிய அசுரா அழகிய அசுரா
அத்துமீற ஆசையில்லையா?
கனவில் வந்து எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா?
அழகிய அசுரா அழகிய அசுரா
அத்துமீற ஆசையில்லையா?
கனவில் வந்து எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா?

வட்ட வட்டமாக வானவில்லை வெட்டி
குட்டி குட்டி மாலை ஆக்குவேன்
புரவி ஏறி நீயும் என்னை அள்ளிக்' கொண்டால்
மூச்சு முட்ட முட்ட சொட்டுவேன்
கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்று
உன்னை அடைவேன்
அழகிய அசுரா அழகிய அசுரா
அத்துமீற ஆசையில்லையா?
கனவில் வந்து எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா?

கடல் நீலத்தில் கண்கள்
கொண்ட பெண்ணிடம் செல்வம் சேரும்
கருங்கூந்தலின் பெண்கள்
தொட்டக் காரியம் வெற்றி ஆகும்
உச்சந்தலையில் உள்ள
என் அர்ஜுனா மச்சம் சொல்லும்
என்னை சேர்பவன் யாரும்
அவன் சகலமும் 
பெற்று வாழ்வான் என்று
அழகிய அசுரா அழகிய அசுரா
அத்துமீற ஆசையில்லையா?
கனவில் வந்து எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா?

கனாவொன்றிலே நேற்று
ரெண்டு பாம்புகள் பின்னே கண்டேன்
நகம் பத்திலும் பூக்கள்
மாறி மாறியேப் பூக்க கண்டேன்
விழுகும் போதே வானில்
எரி நட்சத்திரத்தை கண்டேன்
நிகழும் யாது நன்றாய்
தினம் நிகழ்ந்திட தானே நானும் கண்டேன்
அழகிய அசுரா அழகிய அசுரா
அத்துமீற ஆசையில்லையா?
கனவில் வந்து எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா?
அழகிய அசுரா அழகிய அசுரா
அத்துமீற ஆசையில்லையா?
கனவில் வந்து எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு டார டார டாரரா..

ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு - உத்தமபுத்திரன் (2010)



ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
படம் : உத்தமபுத்திரன் (2010)
பாடியர்கள் : ரஞ்சித் - சங்கீதா - வினயா
இசை : விஜய் ஆண்டனி
இயற்றியவர் : அண்ணாமலை

கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு
பெண் நெஞ்சில் ஆனந்தக் கூத்தாச்சு
பாருங்கடி பொண்ண பாருங்கடி
வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு

ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ 
சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க

தை மாசம் வந்துடுச்சு 
கால நேரம் சேந்துடுச்சு
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு 
மேளச்சத்தம் கேட்டுடுச்சு
மேகம் கருத்துருச்சு 
மாரி மழை பெஞ்சுடுச்சு
மண்ணில் மணம் ஏறிடுச்சு 
மஞ்சள் நிறம் கூடிடுச்சு

தந்தணத் தந்தணத் தந்தணத் 
தந்தணத் தந்தானன்னானன்னானே
தந்தணத் தந்தணத் தந்தணத் 
தந்தணத் தந்தானன்னானன்னானே

ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ 
சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க

ஏ நெனச்சக் கனவு 
ஒண்ணு நெஜமா நடந்துடுச்சு
உன்னோட நான் சேருறது பலிச்சாச்சு

விதைச்ச விதையும் 
இங்கு செடியா முளைச்சிருச்சு
பூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு

கல்யாணத் தேதி வந்து 
கண்ணோடு ஒட்டிக்கிச்சு
என் நெஞ்சில் ஆனந்தக் கூத்தாச்சு

ஏ கண்டாங்கி சேலைக் கட்டி 
என் கைய நீ புடிச்சு
நாம் சேரும் நாளு இங்கு வந்தாச்சு

தந்தணத் தந்தணத் தந்தணத் 
தந்தணத் தந்தானன்னானன்னானே
தந்தணத் தந்தணத் தந்தணத் 
தந்தணத் தந்தானன்னானன்னானே

இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க

ஏ தாங்கும் மரக்கிளையா 
போற வழி நீ துணையா
கூட வர என்ன கொறை அது போதும்

ஏ ஆலமரத்து மேல கூவுற ஒருக்குயிலா
வீட்டுக்குள்ள கூடு கட்டு அது போதும்

என்னோட நீ சிரிச்சா கண்ணீர நீ துடைச்சா
வேறேதும் வேணாமே அது போதும்

வீடு திரும்பையிலே 
வாசல் தொறக்கையிலே
மஞ்சள் முகம் சிரிச்சா அது போதும்

தந்தணத் தந்தணத் தந்தணத் 
தந்தணத் தந்தானன்னானன்னானே
தந்தணத் தந்தணத் தந்தணத் 
தந்தணத் தந்தானன்னானன்னானே

ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ 
சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க

தை மாசம் வந்துடுச்சு 
கால நேரம் சேந்துடுச்சு
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு 
மேளச்சத்தம் கேட்டுடுச்சு
மேகம் கருத்திருச்சு 
மாரி மழை பெஞ்சுடுச்சு
மண்ணில் மணம் ஏறிடுச்சு 
மஞ்சள் நிறம் கூடிடுச்சு

தந்தணத் தந்தணத் தந்தணத் 
தந்தணத் தந்தானன்னானன்னானே
தந்தணத் தந்தணத் தந்தணத் 
தந்தணத் தந்தானன்னானன்னானே

விழிகளில் ஒரு வானவில் - தெய்வத் திருமகன் (2011)



விழிகளில் ஒரு வானவில்
படம் : தெய்வத் திருமகன் (2011)
பாடியவர் : சைந்தவி.
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
வரிகள் : கவிஞர் நா. முத்துக்குமார்

விழிகளில் ஒரு வானவில்.. 
இமைகளைத் தொட்டுப் பேசுதே..
இது என்ன? புது வானிலை.. 
மழை வெயில் தரும்..
உன்னிடம் பார்க்கிறேன்.. 
நான் பார்க்கிறேன்..
என் தாய் முகம் அன்பே..
உன்னிடம் தோற்கிறேன்.. 
நான் தோற்கிறேன்..
என்னாகுமோ? இங்கே..
முதன் முதலாய் மயங்குகிறேன்..
கண்ணாடி போலத் தோன்றினாய்..
என் முன் என்னைக் காட்டினாய்..
கனா எங்கும் வினா..

விழிகளில் ஒரு வானவில்.. 
இமைகளைத் தொட்டுப் பேசுதே..
இது என்ன? புது வானிலை.. 
மழை வெயில் தரும்..

நீ வந்தாய் என் வாழ்விலே..
பூப் பூத்தாய் என் வேரிலே..
நாளையே நீ போகலாம்..
என் ஞாபகம் நீ ஆகலாம்..
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ?
யார் இவன்?  யார் இவன்?
யார் இவன்? யார் இவன்?
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ?
என் தேதி பூத்த பூவிது..
என் நெஞ்சில் வாசம் தூவுது..
மனம் எங்கும் மனம்..

விழிகளில் ஒரு வானவில்.. 
இமைகளைத் தொட்டுப் பேசுதே..
இது என்ன? புது வானிலை.. 
மழை வெயில் தரும்..

நான் உனக்காகப் பேசினேன்..
யார் எனக்காகப் பேசுவார்?
மௌனமாய் நான் பேசினேன்..
கைகளில் மை பூசினேன்..
நீ வந்த  கனவெங்கே காற்றில் கை வீசினேன்..
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்..
மீன் ஆகிறேன் அன்பே..
உன் முன் தானடா இப்போது நான்..
பெண் ஆகிறேன் இங்கே..
தயக்கங்களால் திணருகிறேன்..
நில்லென்று சொன்ன போதிலும்..
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி...

Tuesday, 26 August 2014

பார்த்த ஞாபகம் இல்லையோ? (சோகம்) - புதிய பறவை (1964)



பார்த்த ஞாபகம் இல்லையோ? (சோகம்) 
படம் : புதிய பறவை (1964)
குரல் : பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்
நடிப்பு : நடிகர் திலகம் - பி.சரோஜாதேவி - சௌகார்ஜானகி

ஆஹா..ஆஹஹ..ஹா....ஆஹா..ஆஹஹ..ஹா..
ஆஹா..ஆஹஹ..ஹா..
பார்த்த ஞாபகம் இல்லையோ?
பருவ நாடகம் தொல்லையோ?

பார்த்த ஞாபகம் இல்லையோ?
பருவ நாடகம் தொல்லையோ?

வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ?
மறந்ததே என்ன நெஞ்சமோ?

பார்த்த ஞாபகம் இல்லையோ?
பருவ நாடகம் தொல்லையோ?
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ?
மறந்ததே என்ன நெஞ்சமோ?.
அன்று..
பார்த்த ஞாபகம் இல்லையோ?
பருவ நாடகம் தொல்லையோ?

இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் வாழ்ந்த வாழ்க்கையைச் சொல்லும் - அன்று
பார்த்த ஞாபகம் இல்லையோ?
பருவ நாடகம் தொல்லையோ?

நான் சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
இந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் அந்த நிலவை - அன்று
பார்த்த ஞாபகம் இல்லையோ?
பருவ நாடகம் தொல்லையோ?
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ?
மறந்ததே என்ன நெஞ்சமோ?

பார்த்த ஞாபகம் இல்லையோ? - புதிய பறவை (1964)



பார்த்த ஞாபகம் இல்லையோ?
படம் : புதிய பறவை (1964)
குரல் : பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்
நடிப்பு : நடிகர் திலகம் - பி.சரோஜாதேவி

ஆஹாஹா..ஹாஹஹா..
ஆஹாஹா..ஹாஹஹா..
ஆஹாஹா..ஹாஹஹா..
பார்த்த ஞாபகம் இல்லையோ? 
பருவ நாடகம் தொல்லையோ?
பார்த்த ஞாபகம் இல்லையோ? 
பருவ நாடகம் தொல்லையோ?
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ.. 
மறந்ததே இந்த நெஞ்சமோ.. 
பார்த்த ஞாபகம் இல்லையோ? 
பருவ நாடகம் தொல்லையோ?

அந்த நீலக் நதி கரை ஓரம் 
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
அந்த நீலக் நதி கரை ஓரம் 
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம் 
நாம் பழகி வந்தோம் சில காலம்
பார்த்த ஞாபகம் இல்லையோ? 
பருவ நாடகம் தொல்லையோ?
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ? 
மறந்ததே இந்த நெஞ்சமோ?

இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும் 
பார்த்த ஞாபகம் இல்லையோ? 
பருவ நாடகம் தொல்லையோ?

அன்று சென்றதும் மறந்தாய் உறவை 
இன்று வந்ததே புதிய பறவை
அன்று சென்றதும் மறந்தாய் உறவை 
இன்று வந்ததே புதிய பறவை
இந்த ஜென்மத்திலும் ஒரு தடவை 
நாம் சந்திப்போம் இந்த நிலவை
பார்த்த ஞாபகம் இல்லையோ? 
பருவ நாடகம் தொல்லையோ?
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ? 
மறந்ததே இந்த நெஞ்சமோ?
பார்த்த ஞாபகம் இல்லையோ? 
பருவ நாடகம் தொல்லையோ?

விழியே விழியே பேசும் விழியே - ஈரம் (2009)



விழியே விழியே பேசும் விழியே
படம் : ஈரம் (2009)
பாடியவர்கள் : ரஞ்சித்
இசையமைப்பாளர் : தமன்.எஸ்.
இயற்றியவர் : விவேகா
நடிப்பு : ஆதி - சிந்து மேனன்

விழியே விழியே பேசும் விழியே

ஒரு பார்வை பார்த்தாய்..
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத் தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மாறி போனேன்
இனிமே இனிமே நீ தான் துணையே

மழையே மழையே தூவும் மழையே

இது காதல் தானா
தனியே தனியே நனைந்தேன் மழையே
ம்ம்ம் மனமே மனமே தீயாய்க் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே

மழையே மழையே தூவும் மழையே

இது காதல் தானா
தனியே தனியே நனைந்தேன் மழையே
ம்ம்ம் மனமே மனமே தீயாய்க் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே

ஏ நான் தான் நான் தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்
ஏய் நீ தான் நீராய் எனைச் சுற்றி இருக்கின்றாய்

ஏ நான் தான் நான் தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்
ஏய் நீ தான் நீராய் எனைச் சுற்றி இருக்கின்றாய்

உல்லா ஆஹா உல்லா ஆஹா ஓ…
உல்லா ஆஹா உல்லா ஆஹா ஓ…

சொல்லாமல்  சொல்லாமல்  சொல்வாய்
செல்லாமல்  செல்லாமல்  செல்வாய்

மழையை மழையை
மாறி  மாறி  மழையே

உன்  ஆடைப்  பட்டாலே  ஒரு  சாரல்  அடிக்கிறது
உன்  ஓரப்  புன்னகையால்  பெரும்  தூறல்  வருகிறது

உன்  முகத்தில்  அசையும்  முடி  எனைத் துளியாய்  நனைக்கிறது
உன்  கைகள்  தீண்டுவதால்  அடை  மழையே  பொழிகிறது

போதும்  போ  நீ  போ
என்  கண்கள்  வலிக்கிறது
ஒ  நீ  போ  நீ  போ
என்  உலகம்  உருகிறது

விழியே  விழியே  பேசும்  விழியே
ஒரு  பார்வை  பார்த்தாய்
மழையே  மழையே  நெஞ்சில்  மழையே
தனியேத்  தனியே  வாழ்ந்தேன்  தனியே
நான்  மாறி  போனேன்
இனிமே  இனிமே  நீ  தான்  துணையே

Monday, 25 August 2014

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான் - சிலம்பாட்டம் (2008)



மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்
படம் : சிலம்பாட்டம்  (2008)
பாடியவர்கள் : இசைஞானி இளையராஜா - பெலா ஷாண்டே
இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
இயற்றியவர் : கவிஞர் நா.முத்துக்குமார்

மச்சான் மச்சான் உன் மேலே ஆசை வச்சான் - வெச்சி 
தச்சான் தச்சான் உசுரோட உன்ன தைச்சான்

வச்சான் வச்சான் என்மேலே ஆசை வச்சான் - வெச்சி 
தச்சான் தச்சான் உசுரோட என்ன தைச்சான்

ஏழு ஜென்மம் தான் எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுக்குள்ளே உன்னை சுமப்பேனே

தாயாகி சில நேரம் சேயாகி சில நேரம்
மடி மேலே உன்னை சுமப்பேனே ஏ….
சந்தோஷத்தில் என்ன மறப்பேனே ஓ….

கொன்னுப்புட்ட..கொன்னுப்புட்ட..
கொன்னுப்புட்ட..கொன்னுப்புட்ட..நெஞ்சுக்குள்ள

கொன்னுப்புட்ட..கொன்னுப்புட்ட..
வந்துப்புட்டேன்..தந்துப்புட்டேன்..என்ன உனக்குத்தான்..

மச்சான் மச்சான் உன் மேலே ஆசை வச்சான் - வெச்சி 
தச்சான் தச்சான் உசுரோட உன்ன தைச்சான்

சொல்ல வந்த வார்த்த சொன்ன வார்த்த சொல்லப் போகும்
வார்த்தயாவும் நெஞ்சில் இனிக்குதே

என்னை என்னக் கேட்டு என்னை சொன்னேன் என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ இருக்குதே

பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டிப் போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே……

உன் பெயரைத்தான் சொல்லி தினம்
தாவணியைப் போட்டேனே

உசிரைத்தான் விட்டா கூட உன்னை விட மாட்டேனே
மானே அடி..மானே..

கொன்னுப்புட்ட..கொன்னுப்புட்ட..
கொன்னுப்புட்ட..கொன்னுப்புட்ட..நெஞ்சுக்குள்ள

கொன்னுப்புட்ட..கொன்னுப்புட்ட..
வந்துப்புட்டேன்..தந்துப்புட்டேன்..என்ன உனக்குத்தான்..

மச்சான் மச்சான் உன் மேலே ஆசை வச்சான் - வெச்சி 
தச்சான் தச்சான் உசுரோட உன்ன தைச்சான்

ஆசை வச்சு நெஞ்சு இலவம் பஞ்சுப் போலேத் தானே
உன்னை தேடி நாளும் பறக்குமே

அம்மி கல்லும் மேலே கால வச்சு மெட்டிப் போடும்
அந்த நாளை மனசும் நினைக்குமே

கண்ணை மூடிப் பார்த்தா எங்கும் நீ தான் வந்து போகுதே
உடல் பொருள் ஆவி நீ தானே

என்ன வேணும்? என்ன வேணும்? சொல்லிபுடு ராசாவே

உன்னை போல பொட்டப்புள்ள பெத்துக் கொடு ரோசாவே
தேனே..வந்தேனே..

ஹே…ஹே…

கொன்னுப்புட்ட..கொன்னுப்புட்ட..
கொன்னுப்புட்ட..கொன்னுப்புட்ட.. நெஞ்சுக்குள்ள

கொன்னுப்புட்ட..கொன்னுப்புட்ட..
வந்துப்புட்டேன்..தந்துப்புட்டேன்..என்ன உனக்குத்தான்..

மச்சான் மச்சான் உன் மேலே ஆசை வச்சான் - வெச்சி 
தச்சான் தச்சான் உசுரோட உன்ன தைச்சான்

அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறக்கவில்லை - பணக்காரக் குடும்பம் (1964)



அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறக்கவில்லை
படம் : பணக்காரக் குடும்பம் (1964)
குரல் : டி.எம்.சௌந்தரராஜன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்
நடிப்பு : மக்கள் திலகம் - பி.சரோஜாதேவி 

லாலலாலலாலலா..லாலலாலலாலலா..லாலலாலலாலலா..
அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறக்கவில்லை.. 
அன்ன நடை சின்ன இடை அழகை வெறுக்கவில்லை.. 

சிட்டு விழி வீசி முத்து மொழிப் பேசி 
சின்ன மயில் மறந்து விட்டாள் 
சிட்டு விழி வீசி முத்து மொழிப் பேசி 
சின்ன மயில் மறந்து விட்டாள் 
செங்கரும்புச் சாரும் தென்னை இளநீரும்
தந்த மயில் பறந்து விட்டாள் 
தந்த மயில் பறந்து விட்டாள் 
வண்ண ரதம் காண வந்திருந்த மன்னன் 
வான ரதம் தேடுகிறார் 
பொன்னிருந்த மடியை பூவிருந்தக் கொடியை 
எண்ணி எண்ணி வாடுகிறார்..
அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறக்கவில்லை.. 
அன்ன நடை சின்ன இடை அழகை வெறுக்கவில்லை.. 

கன்னியரை எண்ணி என்ன சுகம் கண்டேன்? 
காலத்தை அழைத்து விட்டேன் 
கன்னியரை எண்ணி என்ன சுகம் கண்டேன்? 
காலத்தை அழைத்து விட்டேன் 
காதல் மண மேடை நாடகத்தில் ஆடும் 
கோலத்தைக் கலைத்து விட்டேன் 
கோலத்தைக் கலைத்து விட்டேன் 
அன்னை மீதாணை தந்தை மீதாணை 
என்னை நீ தீண்டாதே .
அடுத்தொரு பிறவி எடுத்திங்கு வருவோம் 
அது வரை தடுக்காதே..
அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறக்கவில்லை.. 
அன்ன நடை சின்ன இடை அழகை வெறுக்கவில்லை.. 

அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா? - பணக்காரக் குடும்பம் (1964)



அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா?
படம் : பணக்காரக் குடும்பம்  (1964)
குரல் : பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்
நடிப்பு : மக்கள் திலகம் - பி.சரோஜாதேவி 

அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா?
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?

ஓஹோ ஓஹோ ஓஹோ ஒஹோ ஹோஹோஹோஹோஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ ஒஹோ அ ஆஆஆஆஆஆஆஆஆ

அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா?
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?

முத்து முத்துப் பேச்சு கத்தி விழி வீச்சு
அத்தனையும் மறந்தாரா?

முத்து முத்துப் பேச்சு கத்தி விழி வீச்சு
அத்தனையும் மறந்தாரா?
முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க
பெண்ணழகை விடுவாரா? பெண்ணழகை விடுவாரா? 
முத்திரையைப் போட்டு சித்திரத்தை வாட்டி
நித்திரையைக் கெடுப்பாரா?
முத்திரையைப் போட்டு சித்திரத்தை வாட்டி
நித்திரையைக் கெடுப்பாரா?
மூவாசை வெறுத்து ஊராரை மறந்து
முனிவரும் ஆவாரா?

அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா?
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?

கொட்டுமுழக்கோடு கட்டழகு மேனி
தொட்டு விட மனமில்லையா?

கொட்டுமுழக்கோடு கட்டழகு மேனி
தொட்டு விட மனமில்லையா?
கட்டிலுக்குப் பாதி தொட்டிலுக்குப் பாதி
கருணை வரவில்லையா? கருணை வரவில்லையா? 
விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும்
கட்டாமல் விடுவேனா?
விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும்
கட்டாமல் விடுவேனா?
வேளைகளில் நின்று தோழர்களைக் கண்டு
சொல்லாமல் வருவேனா?

ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோஹோஹோஹோஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ ஒஹோ அ ஆஆஆஆஆஆஆஆஆ

அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா?
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?

மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம் - மழை ( 2005)



மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
படம் : மழை ( 2005)
பாடியவர்கள் : எஸ்.பி.பி.சரண் - சுமங்கலி 
இசை : தேவி ஸ்ரீ பிரசாத் 
இயற்றியவர் : கவிஞர்  வைரமுத்து
நடிப்பு : ஷிரேயா சரண் - ஜெயம் ரவி

மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்..

மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்..

காதில் கேட்கும் இடியோசை..
காதல் நெஞ்சின் பரிபாஷை..

மழையை போல உறவாட..
மனதில் என்ன பேராசை..
நீரில் எழுதும் காதல் அழியும்..
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே..
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஓ ஷைலோ..ஷைலோ
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா  ஷைலோ..

மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்..

மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்..

பூ சிதறிடும் மேகம்..
பொன் வானவில் வருகிறதோ?
ஏழு நிறங்களினால் நமக்கொரு மாலை செய்கிறதோ?

பூந்தாரைகள் எல்லாம் நீ பூக்களின் தோரணமோ?
வான் தேவதைகள் ஆசிகள் கூறும் அட்ஷதையோ?

இத்தனை மழையிலும் இந்த நாணம் கரையவில்லை..

கன்னி நான் நனையலாம்..கற்பு நனைவதில்லை..

அடி மனிதனை விடவும்
மழை துளி உயர்ந்தது
இது வரை புரியவில்லை
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஓ ஷைலோ..ஷைலோ
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா  ஷைலோ..

நான் காதலை சொல்ல
என் வாய்மொழி துணை இல்லையே?
தன் வார்த்தைகளால் மழைத்துளி
என் மனம் சொல்லியதே..

முன் கோபுர அழகை உன் தாவணி மூடியதே..
உன் ரகசியத்தை அம்பலம் ஆக்கியதே..

மழைவிழும் பொழுதெல்லாம் 
என்னை வந்து சேர்வாயா?

காதலை சேர்ப்பதே மழையின் வேலையா?

அடிமலர்களில் மழை விழும்,
வேர்களில் வெயில்விழும் அதிசயம் அறிவாயா?

ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஓ ஷைலோ..ஷைலோ
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா  ஷைலோ..

மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்..

மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்..

காதில் கேட்கும் இடியோசை..
காதல் நெஞ்சின் பரிபாஷை..

மழையை போல உறவாட..
மனதில் என்ன பேராசை..

நீரில் எழுதும் காதல் அழியும்
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே..
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஓ ஷைலோ..ஷைலோ
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா  ஷைலோ..

Sunday, 24 August 2014

விண்ணோடு மேளசத்தம் என்ன? - மழை ( 2005)



சின்ன மேகமே..சின்ன மேகமே..
படம் : மழை ( 2005)
பாடியவர்கள் : சித்ரா - எஸ்.பி.பி.சரண் 
இசை : தேவி ஸ்ரீ பிரசாத் 
இயற்றியவர் : கவிஞர் வைரமுத்து
நடிப்பு : ஷிரேயா சரண் - ஜெயம் ரவி - ராகுல்தேவ்

சின்ன மேகமே..சின்ன மேகமே..
சேர்த்து வச்ச காசு வீசு சின்ன மேகமே..
சின்ன மேகமே..சின்ன மேகமே..
சேர்த்து வச்ச காசு வீசு சின்ன மேகமே..
நட்டத் தோட்டம் வாடிப் போச்சு 
நான் குளிச்சு நாளுமாச்சு..
மின்னல் வெட்டி கும்மிக் கொட்டி..
கொட்டு மேகமே.. 
சின்ன மேகமே..சின்ன மேகமே..
சேர்த்து வச்சக் காசு வீசு சின்ன மேகமே..
சின்ன மேகமே..

விண்ணோடு மேளசத்தம் என்ன?
மண்ணோடு சின்னத் தூறல் என்ன?
எங்கேதான் சென்றாயோ?
இப்போது வந்தாயோ?..
சொல்லாமல் வந்தது போல?..
நில்லாமல் போவாயோ?..
தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ? 

நீ வரும் போது நான் மறைவேனா?
நீ வரும் போது நான் மறைவேனா?
தரிகிட..தரிகிட..தா 
விண்ணோடு மேளசத்தம் என்ன?
மண்ணோடு சின்னத் தூறல் என்ன?

கொள்ளை  மழையே கொட்டி வருக.. 
பிள்ளை வயதே மறுபடி வருக.. 
நிற்கவேண்டும் சிற்பமாக..
தாவணியெல்லாம் தெப்பமாக.. 
குடைகளுக்கெல்லாம் விடுமுறை விடுக..
குழந்தைகள் போல என்னுடன் நனைக..
கையில் மழையை  ஏந்தி கொள்க...
கடவுள் தூவும் விரகப் பூவாக..
நீ வரும் போது நான் மறைவேனா?
ஆஹா..
நீ வரும் போது நான் மறைவேனா?
தரிகிட..தரிகிட..தா 
விண்ணோடு மேளசத்தம் என்ன?
மண்ணோடு சின்னத் தூறல் என்ன?

முத்து மழையே..முத்து மழையே..
மூக்கின் மீது மூக்குதியாகு...
வைர மழையே..வைர மழையே..
காதில் வந்து தோடுகள் போடு..
உச்சி விழுந்து நெற்றியில் ஆடி..
நெற்றி கலந்து நீள் வழி ஓடி..
செண்பக மார்பில் சடுகுடி பாடி..
அணுவனுகில் முனு முனு செய்தாயே.. 
நீ வரும் போது நான் மறைவேனா?
ஆ..
நீ வரும் போது நான் மறைவேனா? ஏ..யே..ஏ..
நீ வரும் போது நான் மறைவேனா?
தரிகிட..தரிகிட..தா 
நீ வரும் போது நான் மறைவேனா?
நீ வரும் போது நான் மறைவேனா?
நீ வரும் போது நான் மறைவேனா?
நீ வரும் போது நான் மறைவேனா? ஹே....ஹே..
நீ வரும் போது நான் மறைவேனா? ஹே....ஹே.

நீ கூறினால் வானம் மாறாதா... - 180 நோ ரூல்ஸ் (2011)



நீ கூறினால் வானம் மாறாதா...
படம் : 180 நோ ரூல்ஸ் (2011)
பாடியவர்கள் : கார்த்திக் - ஸ்வேதா மோகன் 
இசை ; ஷரீத் 
இயற்றியவர் : மதன் கார்க்கி 
நடிப்பு : சித்தார்த் - பிரியா ஆனந்த்

நன..நன.நன.. நன..நன.நன..நன..நன.நன.. 
நன..நன.நன.. நன..நன.நன.. நன..நன.நன.. 
நன..நன.நன.. 
நீ கூறினால் வானம் மாறாதா...
தினம் தீராமலே மேகம் தூறாதா..

தீயே இன்றியே - நீ 
எனை வாட்டினாய் 
உன் ஜன்னலை அடைத்தடைத்து 
பெண்ணே ஓடாதே!

தீயே இன்றியே - நீ 
எனை வாட்டினாய் 
உன் ஜன்னலை அடைத்தடைத்து 
பெண்ணே ஓடாதே!

ஓடும் ஓடும் 
அசையாதோடும்
அழகியே 

ஓடும் ஓடும் 
அசையாதோடும்
ஓடும் ஓடும் அழகியே 

நன..நன.நன.. நன..நன.நன..நன..நன.நன.. 
நன..நன.நன.. நன..நன.நன.. நன..நன.நன.. 
நன..நன.நன.. 
நீ கூறினால் வானம் மாறாதா...
தினம் தீராமலே மேகம் தூறாதா..

கண்டும் தீண்டிடா - நான்
போதிச் சாதியா?
என் மீதிப் பாதி பிம்பப் பூவே
பட்டுப் போகாதே! 

கண்டும் தீண்டிடா - நான்
போதிச் சாதியா?
என் மீதிப் பாதி பிம்பப் பூவே
பட்டுப் போகாதே! 

போதையூறும் 
இதழின் ஓரம் 
பருகவா 

போதையூறும் 
இதழின் ஓரம் 
ஓரம் ஓரம் பருகவா 

நன..நன.நன.. நன..நன.நன..நன..நன.நன.. 
நன..நன.நன.. நன..நன.நன.. நன..நன.நன.. 
நன..நன.நன.. 
நீ கூறினால் வானம் மாறாதா...
தினம் தீராமலே மேகம் தூறாதா..

தன..நன.நன..தன..நன..நன.தன..நன..நன.நன.. 
நன..நன.நன.. தன..நன.நன.. நன..நன.நன.. 
தன..நன.நன.. 
நீ கூறினால் வானம் மாறாதா...
தினம் தீராமலே மேகம் தூறாதா..

Saturday, 23 August 2014

காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது - விவசாயி (1967)



காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது
படம் : விவசாயி (1967)
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன் 
இசை ; கே.வி.மகாதேவன்
இயற்றியவர் : உடுமலை நாராயணகவி 
நடிப்பு : மக்கள் திலகம் - கே.ஆர்.விஜயா

காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது
தாலிகட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால்
கவலைப் படுகிறது மனசு கவலைப் படுகிறது
காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது
தாலிகட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால்
கவலைப் படுகிறது…

கட்டிக் கரும்பே கனியே உன்னைத் தட்டிக் கழிப்பேனோ?
நேரம்காலம் பார்த்து முறையாய்ப் பெண்ணும்
கேட்டுக்க வேண்டாமோ? நாளும் பார்த்துக்க வேண்டாமோ?
கட்டிக் கரும்பே கனியே உன்னைத் தட்டிக் கழிப்பேனோ?
நேரம்காலம் பார்த்து முறையாய்ப் பெண்ணும்
கேட்டுக்க வேண்டாமோ?

காலம் நேரம் கடந்தால் இனிமேல்உனக்கு நானில்லை
அன்பே எனக்கும் நீயில்லை
என்னை வேலி போட்ட நிலம் போல் காக்க
தாலி போடோனும் கழுத்தில்மாலை சூடோனும்

எண்ணம் போலே எல்லாம் நடக்கும்எதுவும் தப்பாது
இனிமே எதுவும் தப்பாது
எண்ணம் போலே எல்லாம் நடக்கும்எதுவும் தப்பாது
இனிமேஎ துவும் தப்பாது
இன்னும் என்ன என்ன வேணும்?
கேளு என்னை இப்போது
நீயும் என்னை இப்போது

காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது

நேரம்காலம் பார்த்து முறையாய்ப் பெண்ணும் கேட்டுக்க வேண்டாமோ?

வீட்டைக் கட்டிக் குடித்தனம் நடத்தி பாத்துக்க வேணும்
என்னை காத்துக்க வேணும்
பட்டினில் மெத்தை கட்டில் அங்கே போட்டுக்க வேணும்
சுகத்தை கூட்டிக்க வேணும்

முகத்துக்கு மேலே முகத்தை வச்சு
ஒண்ணு கொடுக்க வேணும்
கொடுத்ததை திருப்பி எடுக்க வேணும்
முகத்துக்கு மேலே முகத்தை வச்சு
ஒண்ணு கொடுக்க வேணும்
கொடுத்ததை திருப்பி எடுக்க வேணும்
பிறகு தொட்டில் போட வேணும்
கொழந்தைய தூங்க வைக்க வேணும்
நீயும் பாட்டு பாட வேணும்

காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது
தாலிகட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால்
கவலைப் படுகிறது மனசு கவலைப் படுகிறது

கட்டிக் கரும்பே கனியே உன்னைத்த ட்டிக் கழிப்பேனோ?
நேரம்காலம் பார்த்து முறையாய்ப் பெண்ணும்
கேட்டுக்க வேண்டாமோ? நாளும் பார்த்துக்க வேண்டாமோ?

 ஹோ.ஹோய்.. ஹோ.ஹோய். ஹோ.ஹோய். ஹோ.ஹோய்.
ஹோய்..ஹோய்.

லலாலே..லலாலே..லலாலே..லலாலே..

நல்ல நல்ல நிலம் பார்த்து - விவசாயி (1967)



நல்ல நல்ல நிலம் பார்த்து
படம் : விவசாயி (1967)
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன் 
இசை ; கே.வி.மகாதேவன்
இயற்றியவர் : உடுமலை நாராயணகவி 
நடிப்பு : மக்கள் திலகம் - கே.ஆர்.விஜயா

நல்ல நிலமா பாத்து , பண்படுத்தி விதை 
விதைக்குறது மாதிரி, 
நல்ல உள்ளங்கள தயார்பண்ணி 
அதுலே அறிவை வளர்க்கணும்..

நல்ல நல்ல நிலம் பார்த்து 
நாமும் விதை விதைக்கணும் 
நாட்டு மக்கள் மனங்களிலே 
நாணயத்தை வளர்க்கணும் 

நல்ல நல்ல நிலம் பார்த்து 
நாமும் விதை விதைக்கணும் 
நாட்டு மக்கள் மனங்களிலே 
நாணயத்தை வளர்க்கணும் 
பள்ளி என்ற நிலங்களிலே 
கல்விதனை விதைக்கணும் 
பிள்ளைகளை சீர்திருத்தி 
பெரியவர்கள் ஆக்கணும் 
நல்ல நல்ல நிலம் பார்த்து 
நாமும் விதை விதைக்கணும் 
நாட்டு மக்கள் மனங்களிலே 
நாணயத்தை வளர்க்கணும் 

கன்னியர்க்கும் காளையர்க்கும் 
கட்டுப்பாட்டை விதைத்து 
கற்பு நிலை தவறாது 
காதல் பயிர் வளர்த்து 

கன்னியர்க்கும் காளையர்க்கும் 
கட்டுப்பாட்டை விதைத்து 
கற்பு நிலை தவறாது 
காதல் பயிர் வளர்த்து
அன்னை தந்தை ஆனவர்க்கு 
தம் பொறுப்பை விதைத்து 
பின் வரும் சந்ததியை 
பேணும் முறை வளர்த்து 
இருப்பவர்கள் இதயத்திலே 
இரக்கமதை விதைக்கணும் 
இல்லாதார் வாழ்க்கையிலே 
இன்பப் பயிர் வளர்க்கணும்
நல்ல நல்ல நிலம் பார்த்து 
நாமும் விதை விதைக்கணும் 
நாட்டு மக்கள் மனங்களிலே 
நாணயத்தை வளர்க்கணும் 

பார் முழுதும் மனிதக்குலப் 
பண்புதனை விதைத்து 
பாமரர்கள் நெஞ்சத்திலே 
பகுத்தறிவை வளர்த்து

பார் முழுதும் மனிதக்குலப் 
பண்புதனை விதைத்து 
பாமரர்கள் நெஞ்சத்திலே 
பகுத்தறிவை வளர்த்து
போர் முறையைக் கொண்டவர்க்கு 
நேர்முறையை விதைத்து 
சீர் வளர தினமும் வேகமதை வளர்த்து 
பெற்றத் திருநாட்டினிலே 
பற்றுதனை விதைக்கணும் 
பற்றுதனை விதைத்துவிட்டு-
நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்
நல்ல நல்ல நிலம் பார்த்து 
நாமும் விதை விதைக்கணும் 
நாட்டு மக்கள் மனங்களிலே 
நாணயத்தை வளர்க்கணும் 
நாணயத்தை வளர்க்கணும் 

இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே - விவசாயி (1967)



இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே
படம் : விவசாயி (1967)
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன் - பி சுசீலா
இசை ; கே.வி.மகாதேவன்
இயற்றியவர் : 
கவிஞர் அ.மருதகாசி

இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே..
இங்கிலீஷ் படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே..
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே..

உங்க சொற்படியே நடத்துக்குறேன் சொல்லுங்க..
நான் எப்படி எப்படி இருக்கணுமோ..
அப்படி அப்படி மாத்துங்க..
சொற்படியே நடத்துக்குறேன் சொல்லுங்க..

இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே..

மானம் பாத்த வெவசாயிங்க நாடு அல்லவோ? -இங்கு
மானம் நாணம் பெண்களுக்கு ஆடை அல்லவோ?..
அதுக்கு...
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே..

உடல் அழகாய் ஊர்மெச்கக் காட்டக்கூடாது
மேலே உடுப்புகளை இடுப்பு தெரியக் காட்டக்கூடாது.
உடல் அழகாய் ஊர்மெச்கக் காட்டக்கூடாது
மேலே உடுப்புகளை இடுப்பு தெரியக் காட்டக்கூடாது.
உதட்டு மேலே சிவப்புச் சாயம் தீட்டக் கூடாது
ஏர்உழவருக்கு ஏத்தப் பண்பை மாத்தக்கூடாது

நாளுக்குநாள் நாகரிகம் மாறிடும்போது
கொஞ்சம் நாமளும்தான் மாறிகிட்டா அதுலே தப்பேது?
நாளுக்குநாள் நாகரிகம் மாறிடும்போது
கொஞ்சம் நாமளும்தான் மாறிகிட்டா அதுலே தப்பேது?

இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே..

பூமுடிஞ்ச கூந்தல் பழைய நீளம் இருக்குதா? - இப்ப
பொம்பளைங்க எல்லாத்துக்கும் புருவம் இருக்குதா?
பூமுடிஞ்ச கூந்தல் பழைய நீளம் இருக்குதா? - இப்ப
பொம்பளைங்க எல்லாத்துக்கும் புருவம் இருக்குதா?
கழுதை தேஞ்சு கட்டெறும்பாச்சு நாட்டுலே -
பெண்கள் காரியத்தே ஆம்பள பாக்குறான் வீட்டுல

எல்லாரோட என்னையும் சேக்கக் கூடாது -
வேலைஎது கொடுத்தாலும் செய்வேன் தப்பாது..
எல்லாரோட என்னையும் சேக்கக் கூடாது -
வேலைஎது கொடுத்தாலும் செய்வேன் தப்பாது..
சொல்லுங்க

களையெடுக்கணும், வெளைய வைக்கணும்
கதிரு முத்தின வயலறுக்கணும்,
கட்டுஞ் சொமக்கணும், களமுஞ் சேக்கணும்
காத்தப் பாத்து தூத்தி விடணும்
காலம் நேரம் கடந்திடாமே
நாலாவேலையும் நாமே பாக்கணும்
ஹோ..ஹோ..ஹோ..
அதுக்கு

இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே
இங்கிலீஷ் படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே

Thursday, 21 August 2014

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - அனுபவி இராஜா அனுபவி (1967)



மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
படம் : அனுபவி இராஜா அனுபவி (1967)
குரல் : டி.எம்.சௌந்தரராஜன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்
நடிப்பு : நாகேஷ் 
( இன்று, மெட்ராஸ் உருவாகி 375 ஆவது 
ஆண்டு தினம். இந்த நாளில் கவியரசரின் கை வண்ணம்)

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் 
அடி ஆத்தாடி..

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவாப் போறவுக யாருமில்லே 
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
மெதுவாப் போறவுக யாருமில்லே 
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் 
வித்தியாசம் தோணல்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் 
வித்தியாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் 
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

சீட்டுக்கட்டுக் கணக்காக 
இங்கே வீட்டக் கட்டி இருக்காக
வீட்டக் கட்டி இருந்தாலும் 
சிலர் ரோட்டு மேலே படுக்காக
பட்டணத்துத் தெருக்களிலே 
ஆளு நிக்க ஒரு நிழலில்லையே?
வெட்டவெளி நிலமில்லையே? 
நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே?
அடி சக்கே..

வைக்கேலாலே கன்னுக் குட்டி 
மாடு எப்போ போட்டுது?
கக்கத்திலே தூக்கி வச்சாக் கத்தலையே என்னது?
வைக்கேலாலே கன்னுக் குட்டி 
மாடு எப்போ போட்டுது?
கக்கத்திலே தூக்கி வச்சாக் கத்தலையே என்னது?
ரொக்கத்துக்கு மதிப்பில்லையே? - இங்கு
வெக்கத்துக்கு விலையில்லையே?
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் 
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

ஊரு கெட்டுப் போனதுக்கு 
மூரு மாருக்கெட்டு அடையாளம்
நாடு கெட்டுப் போனதுக்கு 
மெட்ராஸு நாகரிகம் அடையாளம்

தேராட்டாம் காரினிலே ரொம்பத் திமிரோடு போறவரே 
எங்க ஏரோட்டோம் நின்னு போனா 
உங்க காரோட்டோம் என்னவாகும்?
ஹே..ஹே..

காத்து வாங்க பீச்சுப் பக்கம் காத்து நிக்கும் கூட்டமே
நேத்து வாங்கிப் போன காத்து என்ன ஆச்சு வூட்டிலே?
காத்து வாங்க பீச்சுப் பக்கம் காத்து நிக்கும் கூட்டமே
நேத்து வாங்கிப் போன காத்து என்ன ஆச்சு வூட்டிலே?
கெட்டுப்போன புள்ளிகளா 
வாழப் பட்டணத்தில் வந்தீகளா?
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் 
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெதுவாப் போறவுக யாருமில்லே 
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் 
வித்தியாசம் தோணல்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் 
வித்தியாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் 
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
அடி ஆத்தாடியோ..

பொன்னெழில் பூத்தது புது வானில் - கலங்கரை விளக்கம் (1965)



பொன்னெழில் பூத்தது புது வானில்
படம் : கலங்கரை விளக்கம் (1965)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா 
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
எழுதியவர் : கவிஞர் பஞ்சு அருணாச்சலம்
நடிப்பு : மக்கள் திலகம் - பி.சரோஜாதேவி 

சிவகாமி..சிவகாமி....

ஒ..ஓஓஓஓஓ..ஒ..ஓஓஓஓஓ..

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்

தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கை பட பாடுகிறேன்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்

முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே?
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே?
கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே?

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா

தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா

என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ?
என்னிடம் கோபம் கொள்ளுவதோ?
ஒன்றில் ஒன்றான பின்
தன்னைத் தந்தான பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ?

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா
ஆஆஆஆஆஆஆஆ...
ஆஆஆஆஆஆஆஆ...
ஆஆஆஆஆஆஆஆ...
ஆஆஆஆஆஆஆஆ...

நாளாம் நாளாம் திருநாளாம் - காதலிக்க நேரமில்லை (1964)



நாளாம் நாளாம் திருநாளாம் 
படம் : காதலிக்க நேரமில்லை (1964)
குரல் : பி.பி.ஸ்ரீனிவாஸ் - பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்
நடிகர்கள் : இரவிச்சந்திரன் - இராஜஸ்ரீ

நாளாம் நாளாம் திருநாளாம் 
நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்

இளைய கன்னிகை மேகங்கள் என்னும் 
இந்திரன் தேரில் வருவாளாம்

நாளாம் நாளாம் திருநாளாம் 
நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்

இளைய கன்னிகை மேகங்கள் என்னும் 
இந்திரன் தேரில் வருவாளாம்

நாளாம் நாளாம் திருநாளாம்;;
ஆ..ஆ..ஆ..ஆஆஆஆஆஆஅ

மணமகன் இந்த ஊஞ்சலில் 

மணமகள் மன்னம் மார்பினில்  

மணமகன் இந்த ஊஞ்சலில் 

மணமகள் மன்னம் மார்பினில்  

அங்குஆடும் நாடகம் ஆயிரம் 

அது காதல் தேவனின் காவியம் - 

அதில்ஒருவர் ராகமாம் ஒருவர் தாளமாம் 
இருவர் ஊடலே பாடலாம்

ஓஹோஹோ..

ஓஹோஹோ..
ஆஹஹா ஆ.ஆ..ஆ. ஆ..

ஆஹஹா ஆ.ஆ..ஆ. ஆ..
நாளாம் நாளாம் திருநாளாம்

இளமையின் இந்த ரகசியம் 

இயற்கையில் வந்த அதிசயம்

இளமையின் இந்த ரகசியம் 

இயற்கையில் வந்த அதிசயம்

இதை வாழ்ந்து பார்த்தவர் ஆயிரம் 

அதில் நாமும் இன்னொரு காவியம்  

இந்த இளமை போகலாம் முதுமை சேரலாம் 
இருவர் காதலும் மாறுமோ?

ஓஹோஹோ....

ஓஹோஹோ 

ஆஹஹா ஆ.ஆ..ஆ. ஆ..

ஆஹஹா ஆ.ஆ..ஆ. ஆ..

நாளாம் நாளாம் திருநாளாம் 
நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்
இளைய காதலர் மேகங்கள் என்னும் 
இந்திரன் தேரில் வருவாராம்
நாளாம் நாளாம் திருநாளாம்

எகிப்து நாட்டின் இளவரசி - என்ன முதலாளி சௌக்கியமா? (1972)



எகிப்து நாட்டின் இளவரசி
படம் : என்ன முதலாளி  சௌக்கியமா? (1972) 
பாடியவர் : எல்.ஆர்.ஈஸ்வரி
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்

லா..ல..லா.ல்லா.லா..ல..லா.ல்லா.
லா..ல..லா.ல்லா.லா..ல..லா.ல்லா.
எகிப்து நாட்டின் இளவரசி 
இளமை தவழும் எழிலரசி 
எகிப்து நாட்டின் இளவரசி 
இளமை தவழும் எழிலரசி 

சீசரின் கண்கள் பார்த்த முகம்..
அந்த பரம்பரைதானே இந்த முகம்..
சீசரின் கண்கள் பார்த்த முகம்..
அந்த பரம்பரைதானே இந்த முகம்..

நீல நதி வெண்ணிலவு
போய் வர வேண்டும் தேனிலவு..
காலடிகள் தாளமிட..
வாழ்ந்திட வேண்டும் ஓர் இரவு..
நினைத்து..நினைத்து..
மயங்கி..மயங்கி..

நினைத்து..நினைத்து..
மயங்கி..மயங்கி..
காத்து கிடந்தேன் உனக்காக..
நெருங்க..நெருங்க..
விவரம் புரியும்..
நேரம் வரட்டும் நமக்காக..
எகிப்து நாட்டின் இளவரசி 
இளமை தவழும் எழிலரசி 

லால்லா..லால்லா.லால்லா.
ஜாடையிலே சிரிக்க வைப்போம்..
வார்த்தைகள் இங்கேத் தேவையில்லை.. 
தேவையென்றால்  பேசிக் கொள்வோம்..
கண்களைப் போலே பாஷையில்லை.. 
நிலையை மறந்து..இடத்தை மறந்து..
நிலையை மறந்து..இடத்தை மறந்து..
தூது விடுவோம் சில நேரம்..
கனவு பலிக்கும்..நினைவு நடக்கும்..
கையில் வரட்டும் அதிகாரம்..
எகிப்து நாட்டின் இளவரசி 
இளமை தவழும் எழிலரசி 

மேடையிலே மெல்ல மெல்ல 
ஆடிட வேண்டும் சுகமாக..
மேனியிலே கதை படித்து..
பார்த்திட வேண்டும் பதமாக..
வயதை நினைத்து..உறவை வெறுக்கும்..
வயதை நினைத்து..உறவை வெறுக்கும்.
பெண்களைப் போலே நானில்லை..
நேரம் குறைவு..நினைவு அதிகம்..
காலம் போனால் பொருளில்லை..
எகிப்து நாட்டின் இளவரசி 
இளமை தவழும் எழிலரசி 
சீசரின் கண்கள் பார்த்த முகம்..
அந்த பரம்பரைதானே இந்த முகம்..