Wednesday, 13 August 2014

நிலவைப் பார்த்து வானம் சொன்னது - சவாலே சமாளி (1971)



நிலவைப் பார்த்து சொன்னது என்னை தொடதே.
படம் : சவாலே சமாளி (1971)
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்

நிலவைப் பார்த்து வானம் சொன்னது 
என்னைத் தொடாதே 
நிழலைப்பார்த்து பூமி சொன்னது 
என்னைத் தொடாதே 
நிலவைப் பார்த்து வானம் சொன்னது 
என்னைத் தொடாதே 
நிழலைப்பார்த்து பூமி சொன்னது 
என்னைத் தொடாதே 
நதியைப் பார்த்து நாணல் சொன்னது 
என்னைத் தொடாதே 
நாளைப் பார்த்து இரவு சொன்னது 
என்னைத் தொடாதே 
நிலவைப் பார்த்து வானம் சொன்னது 
என்னைத் தொடாதே 
நிழலைப் பார்த்து பூமி சொன்னது 
என்னைத் தொடாதே 

புதியதல்லவே தீண்டாமை என்பது 
புதுமையல்லவே அதை நீயும் சொன்னது 
புதியதல்லவே தீண்டாமை என்பது 
புதுமையல்லவே அதை நீயும் சொன்னது 
சொன்ன வார்த்தையும் இரவல்தானது 
சொன்ன வார்த்தையும் இரவல்தானது 
திருநீலகண்டரின் மனைவி சொன்னது 
திருநீலகண்டரின் மனைவி சொன்னது 
நிலவைப் பார்த்து வானம் சொன்னது 
என்னைத் தொடாதே 
நிழலைப்பார்த்து பூமி சொன்னது 
என்னைத் தொடாதே 

தாளத்தை ராகம் தொடாதப் போதிலே 
கீதத்தை நெஞ்சம் தொடாமல் போகுமே 
தந்தை தன்னையே தாய் தொடாவிடில் 
நானும் இல்லையே நீயும் இல்லையே 
நானும் இல்லையே நீயும் இல்லையே 
நிலவைப் பார்த்து வானம் சொன்னது 
என்னைத் தொடாதே 
நிழலைப் பார்த்து பூமி சொன்னது 
என்னைத் தொடாதே 

தங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்ததா? 
தர்மம காத்த கை சமதர்மம் கண்டதா? 
ஆலயம் செய்வோம் அங்கே அனுமதியில்லை 
நீ அந்தக் கூட்டமே இதில் அதிசயமில்லை 
நீ அந்தக் கூட்டமே இதில் அதிசயமில்லை 
நிலவைப் பார்த்து வானம் சொன்னது 
என்னைத் தொடாதே 
நிழலைப் பார்த்து பூமி சொன்னது 
என்னைத் தொடாதே

No comments:

Post a Comment