Friday, 8 August 2014

நீ என்னென்ன சொன்னாலும் - நேற்று-இன்று-நாளை (1974)



நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
படம் : நேற்று-இன்று-நாளை (1974)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : புலவர் புலமைப்பித்தன்

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்குத் தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்குத் தொட்டாலும் இனிமை

நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உன்னை எங்கெங்குத் தொட்டாலும் இளமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உன்னை எங்கெங்குத் தொட்டாலும் இளமை 
இனிமை... இளமை...

சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து
சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து
என்னைக் கொஞ்சம் வந்துத் தழுவிட நினைந்து
என்னைக் கொஞ்சம் வந்துத் தழுவிட நினைந்து
முல்லைக் கொடியெனக் கரங்களில் வளைந்து
முல்லைக் கொடியெனக் கரங்களில் வளைந்து
முத்துச் சரமென குறு நகை புரிந்து 
குறு நகை புரிந்து    

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை

உன்னை எங்கெங்குத் தொட்டாலும் இனிமை

பொன்னில் அழகிய மனதினை வரைந்து
பொன்னில் அழகிய மனதினை வரைந்து
பொங்கும் தமிழினில் கவிதைகள் புனைந்து
பொங்கும் தமிழினில் கவிதைகள் புனைந்து
பன்னீர் புது மலர் இதழ்களில் நனைந்து
பன்னீர் புது மலர் இதழ்களில் நனைந்து
கங்கை நதியென உறவினில் கலந்து 
உறவினில் கலந்து    
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை

வெள்ளிப் பனி மலை அருவியில் விழுந்து

வெற்றித் திருமகன் மடியினில் கிடந்து

உள்ள சுகத்தினை முழுவதும் அளந்து

இந்த உலகினை ஒரு கணம் மறந்து 
ஒரு கணம் மறந்து...

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்குத் தொட்டாலும் இனிமை

நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உன்னை எங்கெங்குத் தொட்டாலும் இளமை        

இனிமை...      

இளமை...

No comments:

Post a Comment