Thursday, 7 August 2014

கல்யாண வளையோசை கொண்டு - உரிமைக்குரல் (1974)



கல்யாண வளையோசை கொண்டு
படம் : உரிமைக்குரல் (1974)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவிஞர் வாலி 

கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச் செல்லு

கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச் செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு

மாமன் என் மாமன்
மாமன் என் மாமன்
கஞ்சி வரக் காத்திருக்க
கண்ணிரண்டும் பூத்திருக்க
வஞ்சி வரும் சேதி சொல்லு
வந்த பின்னால் மீதி சொல்லு

கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச் செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு

பாய் விரிக்க புன்னை மரமிருக்க
வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க
பாய் விரிக்க புன்னை மரமிருக்க
வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க
கையோடு நெய் வழிய
கண்ணோடு மை வழிய
அத்தானுக்கு முத்தாடத் தான் ஆசை இருக்காதோ?
ஆசை இருக்காதோ?

கல்யாண வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல இங்கு
வந்தாளே இள வாழந் தண்டு
வாடாத வெண் முல்லைச் செண்டு

ஏர் பிடிக்க கைகள் இடைப் பிடிக்க

ஆஆ இடைப் பிடிக்க

நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க

நெஞ்சு நெகிழ்ந்திருக்க

ஆஹா ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க
நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க
பொன்னான நெல் மணிகள்
கண்ணே உன் கண்மணிகள்
தண்ணீரிலே செவ்வாழை போல்
தாவிச் சிரிக்காதோ 
தாவிச் சிரிக்காதோ

கல்யாண வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல இன்று
வந்தாளே வாழந் தண்டு
வாடாத வெண் முல்லைச் செண்டு

No comments:

Post a Comment