தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத்தமிழ்
படம் : பஞ்சவர்ணக்கிளி (1965)
பாடியவர் : பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
எழுதியவர் : புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
நடிப்பு : கே.ஆர்.விஜயா
தமிழுக்கும் அமுதென்று பேர்..
அந்த தமிழ் இன்பத்தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்..
உயிருக்கு நேர்..
தமிழுக்கும் அமுதென்று பேர்..
அந்த தமிழ் இன்பத்தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்..
உயிருக்கு நேர்..
தமிழுக்கு நிலவென்று பேர்.
இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்..
தமிழுக்கு மணமென்று பேர்..
இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்..
தமிழுக்கு மதுவென்று பேர்..
தமிழுக்கு மதுவென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்..
பயிருக்கு வேர்..
தமிழுக்கும் அமுதென்று பேர்..
அந்த தமிழ் இன்பத்தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்..
உயிருக்கு நேர்..
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்..
ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆ
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
இன்பத்தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்..
புலவர்க்கு வேல்..
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்..
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்..
சுடர் தந்த தேன்..
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்..
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்..
சுடர் தந்த தேன்..
தமிழுக்கும் அமுதென்று பேர்..
அந்த தமிழ் இன்பத்தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்..
உயிருக்கு நேர்..
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழுக்கும் அமுதென்று பேர்..
அந்த தமிழ் இன்பத்தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்..
உயிருக்கு நேர்..
தமிழுக்கும் அமுதென்று பேர்..
No comments:
Post a Comment