Sunday, 17 August 2014
யாரோ இவன் யாரோ இவன் - உதயம் NH4 (2013)
யாரோ இவன் யாரோ இவன்
படம் : உதயம் NH4 (2013)
பாடியவர்கள் : ஜி.வி.பிரகாஷ் குமார் - சைந்தவி
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
இயற்றியவர் : கவிஞர் நா.முத்துக்குமார்
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்
உன் காதலில் அலைகின்றவன்
உன் பார்வையில் உரைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்
எங்கே உன்னை கூட்டிச் செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
மெதுவாக இதயங்கள் நனைகிறதே
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்
உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ?
உன் வாசனை வரும் வேளையில்
என் வாசனை ஏன் மாறுதோ?
நதியினில் ஒரு இலை விழுகிறதே
அலைகளில் மிதந்து அது தவழ்கிறதே
கரைசேருமோ உன் கைசேருமோ எதிர்காலமே?
எனக்காகவேப் பிறந்தான் இவன்
எனைக் காக்கவே வருவான் இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
வருவான் அவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment