கண்ணன் வருவான் கதைச் சொல்லுவான்
படம் : பஞ்சவர்ணக்கிளி (21.05.1965)
பாடியவர் : பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்
நடிப்பு : ஆர்.முத்துராமன் - கே.ஆர்.விஜயா
இயக்கம் : கே சங்கர்
தயாரிப்பு : சரவணா பிக்சர்ஸ் (சி.எம்.சின்னத்தம்பி)
வா.வா..வா..வா..வா..வா...
கண்ணே வாடா...கண்மணி வாடா..
பொன்னே வாடா..பொன்மணி வாடா..
புன்னகை புரியும் கண்ணா வாடா.
புல்லாங்குழலின் மன்னா வாடா..
அழகே வாடா..அருகே வாடா..
அன்பே வாடா..முத்தம் தாடா..
கண்ணன் வருவான் கதைச் சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
கண்ணன் வருவான் கதைச் சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க
பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க...
முத்தம் கொடுக்க...
தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கித் திக்கிப் பேசுகையில் குயில் போலே
கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே
ஆரிரோ ஆரி ராரி ஆரி ராரி ஆராரோ
ஆராரோ ஆரி ராரி ராரி ராரி ராராரோ
ஆரி ராரி ஆரி ராரி ஆராரோ
ஆராரோ ஆரி ராரி ராரி ராரி ஆராரோ
கண்ணன் வருவான் கதைச் சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான்...
உறங்க வைத்தான்...
ஆரிரோ ஆரி ராரி ஆரி ராரி ஆராரோ
ஆராரோ ஆரி ராரி ராரி ராரி ராராரோ
ஆரி ராரி ஆரி ராரி ஆராரோ
ஆராரோ ஆரி ராரி ராரி ராரி ஆராரோ
கண்ணன் வருவான் கதைச் சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
No comments:
Post a Comment