Saturday, 23 August 2014

நல்ல நல்ல நிலம் பார்த்து - விவசாயி (1967)



நல்ல நல்ல நிலம் பார்த்து
படம் : விவசாயி (1967)
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன் 
இசை ; கே.வி.மகாதேவன்
இயற்றியவர் : உடுமலை நாராயணகவி 
நடிப்பு : மக்கள் திலகம் - கே.ஆர்.விஜயா

நல்ல நிலமா பாத்து , பண்படுத்தி விதை 
விதைக்குறது மாதிரி, 
நல்ல உள்ளங்கள தயார்பண்ணி 
அதுலே அறிவை வளர்க்கணும்..

நல்ல நல்ல நிலம் பார்த்து 
நாமும் விதை விதைக்கணும் 
நாட்டு மக்கள் மனங்களிலே 
நாணயத்தை வளர்க்கணும் 

நல்ல நல்ல நிலம் பார்த்து 
நாமும் விதை விதைக்கணும் 
நாட்டு மக்கள் மனங்களிலே 
நாணயத்தை வளர்க்கணும் 
பள்ளி என்ற நிலங்களிலே 
கல்விதனை விதைக்கணும் 
பிள்ளைகளை சீர்திருத்தி 
பெரியவர்கள் ஆக்கணும் 
நல்ல நல்ல நிலம் பார்த்து 
நாமும் விதை விதைக்கணும் 
நாட்டு மக்கள் மனங்களிலே 
நாணயத்தை வளர்க்கணும் 

கன்னியர்க்கும் காளையர்க்கும் 
கட்டுப்பாட்டை விதைத்து 
கற்பு நிலை தவறாது 
காதல் பயிர் வளர்த்து 

கன்னியர்க்கும் காளையர்க்கும் 
கட்டுப்பாட்டை விதைத்து 
கற்பு நிலை தவறாது 
காதல் பயிர் வளர்த்து
அன்னை தந்தை ஆனவர்க்கு 
தம் பொறுப்பை விதைத்து 
பின் வரும் சந்ததியை 
பேணும் முறை வளர்த்து 
இருப்பவர்கள் இதயத்திலே 
இரக்கமதை விதைக்கணும் 
இல்லாதார் வாழ்க்கையிலே 
இன்பப் பயிர் வளர்க்கணும்
நல்ல நல்ல நிலம் பார்த்து 
நாமும் விதை விதைக்கணும் 
நாட்டு மக்கள் மனங்களிலே 
நாணயத்தை வளர்க்கணும் 

பார் முழுதும் மனிதக்குலப் 
பண்புதனை விதைத்து 
பாமரர்கள் நெஞ்சத்திலே 
பகுத்தறிவை வளர்த்து

பார் முழுதும் மனிதக்குலப் 
பண்புதனை விதைத்து 
பாமரர்கள் நெஞ்சத்திலே 
பகுத்தறிவை வளர்த்து
போர் முறையைக் கொண்டவர்க்கு 
நேர்முறையை விதைத்து 
சீர் வளர தினமும் வேகமதை வளர்த்து 
பெற்றத் திருநாட்டினிலே 
பற்றுதனை விதைக்கணும் 
பற்றுதனை விதைத்துவிட்டு-
நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்
நல்ல நல்ல நிலம் பார்த்து 
நாமும் விதை விதைக்கணும் 
நாட்டு மக்கள் மனங்களிலே 
நாணயத்தை வளர்க்கணும் 
நாணயத்தை வளர்க்கணும் 

No comments:

Post a Comment