கடலோரம் வாங்கிய காத்து
படம் : ரிக்க்ஷாகாரன் (1971)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கதகதப்பா மாறிடுமோ?
காதலித்தால் ஆறிடுமோ?
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
சிறு மணல் வீட்டில் குடியேறும் நண்டானது
இவள் கண் பார்த்து மீன் என்று திண்டாடுது
சிறு மணல் வீட்டில் குடியேறும் நண்டானது
இவள் கண் பார்த்து மீன் என்று திண்டாடுது
பொங்கும் நுரையோடு கரை சேரும் அலையானது
இந்த பெண் பார்த்து நிலவென்று விளையாடுது
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
வண்ணப் பூச் சேலை மலர் மேனி மறைக்கின்றது
அதைப் பூங்காற்று மெதுவாக இழுக்கின்றது
வண்ணப் பூச் சேலை மலர் மேனி மறைக்கின்றது
அதைப் பூங்காற்று மெதுவாக இழுக்கின்றது
இடம் கொடுக்காமல் தளிர் கைகள் தடுக்கின்றது
வெட்கம் தாளாமல் இளம் நெஞ்சம் துடிக்கின்றது
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கோயில் சிலை ஒன்று உயிர் கொண்டு நடை போடுதோ?
இரு விழி கொண்டு என்னைப் பார்த்து எடை போடுதோ?
கோயில் சிலை ஒன்று உயிர் கொண்டு நடை போடுதோ?
இரு விழி கொண்டு என்னைப் பார்த்து எடை போடுதோ?
ஒரு துணை வந்து விலை கொள்ள தடை போடுதோ?
அதை நான் வாங்க அவள் நாணம் தடை போடுதோ?
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கதகதப்பா மாறிடுமோ?
காதலித்தாள் ஆறிடுமோ?
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
No comments:
Post a Comment