Wednesday, 13 August 2014

விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே - உரிமைக்குரல் (1974)



விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே 
படம் : உரிமைக்குரல் (1974)
பாடியவர் : கே.ஜே.யேசுதாஸ் - பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
எழுதியவர் : கவியரசு கண்ணதாசன்

விழியே... கதை எழுது... கண்ணீரில்... எழுதாதே...
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன் 

மஞ்சள் வானம் தென்றல் சாட்சி 
உனக்காகவே நான் வாழ்கிறேன் 

விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே 
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி 
உனக்காகவே நான் வாழ்கிறேன் 

மனதில் வடித்து வைத்த சிலைகள் 
அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள் 
மனதில் வடித்து வைத்த சிலைகள் 
அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள் 

மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும் 
வானத்தை யார் மூடக் கூடும்

உனக்காகவே நான் வாழ்கிறேன் 

கோவில் பெண் கொண்டது 
தெய்வம் கண் தந்தது 
கோவில் பெண் கொண்டது 
தெய்வம் கண் தந்தது 
பூஜை யார் செய்வது இந்த 
பூவை யார் கொள்வது 
ஊமைக்கு வேறேது பாஷை 
உள்ளத்தில் ஏதேதோ ஆசை

உனக்காகவே நான் வாழ்கிறேன் 

விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே 

மஞ்சள் வானம் தென்றல் சாட்சி 
உனக்காகவே நான் வாழ்கிறேன்

தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது 
தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது 
காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது 
எண்ணத்தில் என்னென்ன தோற்றம் 
என் நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்

உனக்காகவே நான் வாழ்கிறேன் 

விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே

மஞ்சள் வானம் தென்றல் சாட்சி 
உனக்காகவே நான் வாழ்கிறேன்
உனக்காகவே நான் வாழ்கிறேன்

No comments:

Post a Comment