Friday, 8 August 2014

மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ - பிள்ளையோ பிள்ளை (1972)



மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ 

படம் : பிள்ளையோ பிள்ளை (1972)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவிஞர் வாலி

மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ - நீ
மூவேந்தர் வழி வந்த மன்னவனோ - நீ
மூவேந்தர் வழி வந்த மன்னவனோ..

நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ - அது
நடை பழகி வந்ததென்ன என்னிடமோ - அது
நடை பழகி வந்ததென்ன.. என்னிடமோ.. 
என்னிடமோ..
நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ..

உதித்தது பார் செங்கதிர்தான் கீழ்த்திசையில் - அதன்
ஒளிவெள்ளம் பாய்ந்தது பார் வான்வெளியில்
ஆ..ஆ..ஆஆஆ
உதித்தது பார் செங்கதிர்தான் கீழ்த்திசையில் - அதன்
ஒளிவெள்ளம் பாய்ந்தது பார் வான்வெளியில்

கதிர் போலே நான் கண்டேன் மன்னன் முகம் - அதன்
ஒளியாலே மலரும் நான் செங்கமலம்..
செங்கமலம்..

மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ - 

நீ
மூவேந்தர் வழி வந்த மன்னவனோ.. 
மன்னவனோ..

பனிமழையில் நனைந்ததென்ன மலர் விழிகள் - உன்னைப்
பார்க்கையிலே பேசிடுமோ கிளிமொழிகள்
பனிமழையில் நனைந்ததென்ன மலர் விழிகள் - உன்னைப்
பார்க்கையிலே பேசிடுமோ கிளிமொழிகள்

இரு கனிகள் காய்த்ததென்ன ஒரு கொடியில் - அது
விருந்தெனவே தவழ்ந்ததென்ன என் மடியில் - அது
விருந்தெனவே தவழ்ந்ததென்ன என் மடியில்..
என் மடியில்..

மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ

இள நகைதான் நீ எழுதும் சிறுகதையோ - அதன்
இடை தோன்றும் நாணம்தான் முன்னுரையோ
ஓ.ஓ..ஓஓ.ஓ..
இள நகைதான் நீ எழுதும் சிறுகதையோ - அதன்
இடை தோன்றும் நாணம்தான் முன்னுரையோ

இடம் தந்தால் நடப்பதெல்லாம் தொடர்கதையோ - அந்த
இலக்கியத்தில் விடிந்தால்தான் முடிவுரையோ..

நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ - அது
நடை பழகி வந்ததென்ன என்னிடமோ - அது
நடை பழகி வந்ததென்ன என்னிடமோ.. 
என்னிடமோ..

மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ - நீ
மூவேந்தர் வழி வந்த மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ - நீ
மூவேந்தர் வழி வந்த மன்னவனோ..
மன்னவனோ..

1 comment:

  1. வாலியின் அசத்தும் அற்புத வரிகள்... கேட்கக் கேட்கத் திகட்டாத தேன் தமிழ்1

    ReplyDelete