அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறக்கவில்லை
படம் : பணக்காரக் குடும்பம் (1964)
குரல் : டி.எம்.சௌந்தரராஜன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்
நடிப்பு : மக்கள் திலகம் - பி.சரோஜாதேவி
லாலலாலலாலலா..லாலலாலலாலலா..லாலலாலலாலலா..
அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறக்கவில்லை..
அன்ன நடை சின்ன இடை அழகை வெறுக்கவில்லை..
சிட்டு விழி வீசி முத்து மொழிப் பேசி
சின்ன மயில் மறந்து விட்டாள்
சிட்டு விழி வீசி முத்து மொழிப் பேசி
சின்ன மயில் மறந்து விட்டாள்
செங்கரும்புச் சாரும் தென்னை இளநீரும்
தந்த மயில் பறந்து விட்டாள்
தந்த மயில் பறந்து விட்டாள்
வண்ண ரதம் காண வந்திருந்த மன்னன்
வான ரதம் தேடுகிறார்
பொன்னிருந்த மடியை பூவிருந்தக் கொடியை
எண்ணி எண்ணி வாடுகிறார்..
அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறக்கவில்லை..
அன்ன நடை சின்ன இடை அழகை வெறுக்கவில்லை..
கன்னியரை எண்ணி என்ன சுகம் கண்டேன்?
காலத்தை அழைத்து விட்டேன்
கன்னியரை எண்ணி என்ன சுகம் கண்டேன்?
காலத்தை அழைத்து விட்டேன்
காதல் மண மேடை நாடகத்தில் ஆடும்
கோலத்தைக் கலைத்து விட்டேன்
கோலத்தைக் கலைத்து விட்டேன்
அன்னை மீதாணை தந்தை மீதாணை
என்னை நீ தீண்டாதே .
அடுத்தொரு பிறவி எடுத்திங்கு வருவோம்
அது வரை தடுக்காதே..
அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறக்கவில்லை..
அன்ன நடை சின்ன இடை அழகை வெறுக்கவில்லை..
No comments:
Post a Comment