போகப் போகத் தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும்
படம் : சர்வர் சுந்தரம் (1964)
பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீனிவாசன் - பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்
நடிப்பு : ஆர்.முத்துராமன் - கே.ஆர்.விஜயா
ஆஹா..ஹா..ஆஹா.. ஹா..
ஆஹா..ஹா..ஆஹா.. ஹா..
போகப் போகத் தெரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
போகப் போகத் தெரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
சிறு தாளம் அதிலே இணையும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
சிறு தாளம் அதிலே இணையும்
போகப் போகத் தெரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன?
கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன?
கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன?
கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன?
பொன்னாடைத் தள்ளாட மேடை என்னோடு
ஆட வாராமல் இருப்பதென்ன?
பொன்னாடைத் தள்ளாட மேடை என்னோடு
ஆட வாராமல் இருப்பதென்ன?
போகப் போகத் தெரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
சிறு தாளம் அதிலே இணையும்
போகப் போகத் தெரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
பார்த்தால் உன் மேனிப் பார்த்திருப்பேன்
கேட்டால் உன் பேரைக் கேட்டிருப்பென்
பார்த்தால் உன் மேனிப் பார்த்திருப்பேன்
கேட்டால் உன் பேரைக் கேட்டிருப்பென்
என் காதல் உனக்காகப் பாதை வகுத்தாலும்
பயணம் வாராமல் இருப்பதென்ன?
என் காதல் உனக்காகப் பாதை வகுத்தாலும்
பயணம் வாராமல் இருப்பதென்ன?
காலம் நேரம் பிறக்கும்
நம் காதல் கதவுகள் திறக்கும்
நம் கண்கள் அப்போது துடிக்கும்
உன் கன்னம் எப்போது சிவக்கும்
போகப் போகத் தெரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
ஆஹா..ஹா..ஆஹா.. ஹா..
ஓஹோ..ஹோ..ஓஹோ..ஹோ..
ஆஹா..ஹா..ஆஹா.. ஹா..
ஓஹோ..ஹோ..ஓஹோ..ஹோ..
No comments:
Post a Comment