Tuesday, 12 August 2014

நான் கவிஞனும் இல்லை - படித்தால் மட்டும் போதுமா (1962)



நான் கவிஞனும் இல்லை
படம் : படித்தால் மட்டும் போதுமா (1962)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.இராமமூர்த்தி
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்

நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை 
நான் கவிஞனும் இல்லை 
நல்ல ரசிகனும் இல்லை 
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை 
நான் கவிஞனும் இல்லை 
நல்ல ரசிகனும் இல்லை 
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை 

இரவு நேரம் பிறரைப்போலே என்னையும் கொல்லும் 
துணை இருந்தும் இல்லை என்று போனால் 
ஊர் என்ன சொல்லும்?
இரவு நேரம் பிறரைப்போலே என்னையும் கொல்லும் 
துணை இருந்தும் இல்லை என்று போனால் 
ஊர் என்ன சொல்லும்?
ஆஹா..ஹா..ஓஹோ..ஹோ....
நான் கவிஞனும் இல்லை 
நல்ல ரசிகனும் இல்லை 
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை 

அன்பே..ஆருயிரே..
இன்பமே..இனியவளே..
பண்போடு..அன்போடுப் படியேறி வந்தவளே..
பார்த்துப் பார்த்து மயங்க வைத்து
காத்துக் காத்து நிற்க வைத்த கண்ணே - உன்மேல் 
பாட்டுப் பாட..பாட்டுப் பாட 
நான் கவிஞனும் இல்லை 
நல்ல ரசிகனும் இல்லை 
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை 

காட்டு மானை வேட்டையாட தயங்கவில்லையே 
இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே
கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே
கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே
நான் கொண்டு வந்த பெண் மனதில் 
பெண்மை இல்லையே? 
நான் கவிஞனும் இல்லை 
நல்ல ரசிகனும் இல்லை 
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை 

நான் அழுதால் சிரிக்கிறாள்
சிரித்தால் அழுகிறாள் 
கொஞ்சினால் கொதிக்கிறாள் 
கெஞ்சினால் மிதிக்கிறாள் 
இருப்பதா? இறப்பதா?
அழுவதா? சிரிப்பதா?
அம்மா தாயே..தாயே..

நான் கவிஞனும் இல்லை 
நல்ல ரசிகனும் இல்லை 
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை 
நான் கவிஞனும் இல்லை 
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை

No comments:

Post a Comment