Tuesday, 12 August 2014

அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் - வெண்ணிற ஆடை (1965)

அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
படம்: வெண்ணிற ஆடை (1965)
பாடியவர் :  பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்

அம்மம்மா காற்று வந்து ஆடைத் தொட்டுப் பாடும்

பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடிக் கன்னம் கொஞ்சம் வாடும்

யாரோ வந்து நேரே என்னை  மெல்ல மெல்ல கொஞ்சும் சுகமோ?
நீரில் நின்று தேனும் தந்து அள்ளி அள்ளி கொள்ளும் சுகமோ?

தள்ளாடி தள்ளாடி செல்லும் பெண்ணைத் தேடி
சொல்லாமல் கொள்ளாமல் துள்ளும் எண்ணம் கோடி
அம்மம்மா காற்று வந்து ஆடைத் தொட்டுப் பாடும்
பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடிக் கன்னம் கொஞ்சம் வாடும் 

ஏதோ இன்பம் ஏனோ தந்து
என்னைத் தொட்டு செல்லும் வெள்ளமே
தானே வந்து தானே தந்து
தள்ளி தள்ளி செல்லும் உள்ளமே
அன்னாளில் என்னாளும் இல்லை இந்த எண்ணம்
அச்சாரம் தந்தாயே அங்கம் மின்னும் வண்ணம்
அம்மம்மா ஆ.. 
அம்மம்மா காற்று வந்து ஆடைத் தொட்டுப் பாடும்
பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடிக் கன்னம் கொஞ்சம் வாடும் 
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
ஆசை வெள்ளம் ஓடும்

No comments:

Post a Comment