Wednesday, 13 August 2014

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் - பாலும் பழமும் (1961)



ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
படம்: பாலும் பழமும் (1961)
பாடியவர் : பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
எழுதியவர் : கவியரசு கண்ணதாசன்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
உன் இறைவன் அவனே அவனே 
எனப் பாடும் மொழிக் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே 
எனும் தாயின் மொழிக் கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

இளகும் மாலைப் பொழுதினிலே 
என் இறைவன் வந்தான் தேரினிலே
இளகும் மாலைப் பொழுதினிலே 
என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் 
இரு விழியாலே மாலையிட்டான்...
இரு விழியாலே மாலையிட்டான்
இறைவன் அவனே அவனே 
எனப் பாடும் மொழிக் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே 
எனும் தாயின் மொழிக் கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே 
கருணைத் தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே 
கருணைத் தேவன் மடியினிலே
யாரும் அறியாப் பொழுதினிலே 
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே...
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
இறைவன் அவனே அவனே 
எனப் பாடும் மொழிக் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே 
எனும் தாயின் மொழிக் கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

No comments:

Post a Comment