வெள்ளிக் கிண்ணம் தான் தங்கக் கைகளில்
படம் : உயர்ந்த மனிதன் (1968)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவிஞர் வாலி
வெள்ளிக் கிண்ணம் தான் தங்கக் கைகளில்
முத்துப் புன்னகை அந்த கண்களில்
வைரச் சிலை தான்
எந்தன் பக்கத்தில்
தொட்டுக் கலந்தால்
அது தான் சுகம்...
வெள்ளிக் கிண்ணம் தான்
ஆ... ஆ...
தங்கக் கைகளில்
ஆ... ஆ...
முத்துப் புன்னகை
ஆ... ஆ...
அந்த கண்களில்
ஆ... ஆ...
சித்திர விழிகளென்ன? மீனோ? மானோ?
அஹ்ஹ ஹா...
செவ்விதழ் வடித்ததென்ன? பாலோ? தேனோ?
அஹ்ஹ ஹா...
முத்திரைக் கன்னங்கள் என்ன? பூவோ? பொன்னோ?
அஹ்ஹ ஹா...
முத்திரை கன்னங்கள் என்ன? பூவோ? பொன்னோ?
மோகத்தில் துடித்ததென்ன? நீயோ? நானோ?
மோகத்தில் துடித்ததென்ன? நீயோ? நானோ?
இன்னும் சொல்லவோ? இன்பமல்லவோ?
அஹ ஹாஹஹா அஹ ஹா...
அஹ்ஹ ஹஹ்ஹஹா... ஆஹ ஹா...
அஹ்ஹ ஹஹ்ஹஹா... ஆஹ ஹா...
கட்டுடல் சுமந்த மகள் முன்னே செல்ல
அஹ்ஹ ஹா...
கை தொட்டு தலைவன் அவள் பின்னே செல்ல
அஹ்ஹ ஹா...
காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன?
அஹ்ஹ ஹா...
காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன?
கண் பட்டு கலந்து கொண்ட வேகம் என்ன?
கண் பட்டு கலந்து கொண்ட வேகம் என்ன?
இன்னும் சொல்லவோ?
இன்பமல்லவோ?
லல லாலலா லல லாலலா
வெள்ளிக் கிண்ணம் தான்
ஆ... ஆ...
தங்கக் கைகளில்
ஆ... ஆ...
முத்துப் புன்னகை
ஆ... ஆ...
அந்த கண்களில்
ஆ... ஆ...
வைரச் சிலை தான்
ஆ... ஆ...
எந்தன் பக்கத்தில்
ஆ... ஆ...
தொட்டுக் கலந்தால்
ஆ... ஆ...
அது தான் சுகம்...
லல்லலல்ல லா... லலலா...
லல்லலல்ல லா... லலலா...
No comments:
Post a Comment