Monday, 18 August 2014

காதலிக்க நேரமில்லை..காதலிப்பார் யாருமில்லை - காதலிக்க நேரமில்லை (1964)



காதலிக்க நேரமில்லை..காதலிப்பார் யாருமில்லை 
படம் : காதலிக்க நேரமில்லை (1964)
பாடியவர் : சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்

காதலிக்க நேரமில்லை 
காதலிப்பார் யாருமில்லை
காதலிக்க நேரமில்லை 
காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க 
ஜாதகத்தில் வழியுமில்லை
ஜாதகத்தில் வழியுமில்லை
காதலிக்க நேரமில்லை 
ஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆ

பஞ்சணையும் கண்டதில்லை 
பால் பழம் குடித்ததில்லை

பஞ்சணையும் கண்டதில்லை 
பால் பழம் குடித்ததில்லை
வஞ்சி உன்னைக் காணும் வரை 
மனதும் துடித்ததில்லை
பஞ்சு போல நரை விழுந்து 
பார்வையும் குழி விழுந்து
பஞ்சு போல நரை விழுந்து 
பார்வையும் குழி விழுந்து
ரெண்டுங்கெட்ட வேளையிலே 
கண்டேனே உன்னையடி
கண்டேனே உன்னையடி
காதலிக்க நேரமில்லை 
காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க 
ஜாதகத்தில் வழியுமில்லை
ஜாதகத்தில் வழியுமில்லை

காயிலே சுவைப்பதில்லை 
கனிந்ததும் கசப்பதில்லை

காயிலே சுவைப்பதில்லை 
கனிந்ததும் கசப்பதில்லை
நோயில்லா உடல் இருந்தால் 
நூறு வரை காதல் வரும்
மாமியார் கொடுமை இல்லை 
மாமனார் யாரும் இல்லை
மாமியார் கொடுமை இல்லை 
மாமனார் யாரும் இல்லை
இந்த சாமியை மணமுடித்தால் 
சந்தோஷம் குறைவதில்லை
சந்தோஷம் குறைவதில்லை
காதலிக்க நேரமில்லை 
காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க 
ஜாதகத்தில் வழியுமில்லை
ஜாதகத்தில் வழியுமில்லை

அவ்வுலகம் சென்று வந்தேன் 
அமுதம் குடித்து வந்தேன்
அவ்வுலகம் சென்று வந்தேன் 
அமுதம் குடித்து வந்தேன்
பொன்னுலகம் போவதற்கு 
புது உடல் வாங்கி வந்தேன்
பொன்னுலகம் போவதற்கு 
புது உடல் வாங்கி வந்தேன்
இந்திரனைக் கண்டு வந்தேன் 
இது பற்றிக் கேட்டு வந்தேன்
இந்திரனைக் கண்டு வந்தேன் 
இது பற்றிக் கேட்டு வந்தேன்
சந்திரனைக் கண்டு வந்தேன் 
சரசம் நடத்த வந்தேன்
சந்திரனைக் கண்டு வந்தேன் 
சரசம் நடத்த வந்தேன்

காதலிக்க நேரமுண்டு 
கன்னியுண்டு காளையுண்டு
காதலிக்க நேரமுண்டு 
கன்னியுண்டு காளையுண்டு
வாலிபத்தில் காதலிக்க 
ஜாதகத்தில் வழியுமுண்டு
வாலிபத்தில் காதலிக்க 
ஜாதகத்தில் வழியுமுண்டு
காதலிக்க நேரமுண்டு 
கன்னியுண்டு காளையுண்டு
லாலல்லா லாலல்லல்லே 
லாலல்லே லாலல் லல்லா

No comments:

Post a Comment