Saturday, 31 May 2014

ஒன்றா இரண்டா ஆசைகள்.. - காக்க காக்க (2003)



ஒன்றா ரெண்டா ஆசைகள்
படம் : காக்க காக்க (2003)
பாடியவர் : பாம்பே ஜெயஸ்ரீ
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயற்றியவர் : கவிஞர் தாமரை

ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில்... நான்..நான் கண்ட..ஆ..ஆ.ஆ..
நாளிதுதான் கலாபக்காதலா
பார்வைகளால்... பலகதைகள்.. பேசிடலாம் கலாபக் காதலா
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா

பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேராய் பார்த்துதான்
நீ பேசும் தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே
என் மனசில் மழையடிக்கும்
மிகப்பிடித்த பாடலொன்றை
உதடுகளும் முணுமுணுக்கும்
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்
உனது கண்களில் எனது கனவினை காணப் போகிறேன்
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
அன்பே இரவைக் கேட்கலாம்..
இரவைக் கேட்கலாம்.
விடியல் தாண்டியும் இரவே நீளுமா

சந்தியாக்கால மேகங்கள்
பொன்வானில் ஊர்வலம் போகுதே
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே
உன் நடையின் சாயலே தோணுதே
நதிகளிலே நீராடும்
சூரியனை நான் கண்டேன்
வேர்வைகளின் துளி வழிய
நீ வருவாய் என நின்றேன்
உன்னால் என் நெஞ்சில் ஆணின் மணம்
நானுன் சொந்தம் என்ற எண்ணம் தரும்
மகிழ்ச்சி மீறுதே
வானைத் தாண்டுதே
சாகத் தோன்றுதே..

அன்பே இரவைக் கேட்கலாம்..
இரவைக் கேட்கலாம்..
விடியல் தாண்டியும் இரவே நீளுமா..
இரவே நீளுமா..
என் கனவில்... நான்..நான் கண்ட.. நாளிதுதான் கலாபக்காதலா
பார்வைகளால்...ஆ..ஆ..ஆ.. பலகதைகள்..ஆ.ஆ..ஆ.. பேசிடலாம் கலாபக்காதலா..
கலாபக்காதலா..




ஞாயிறு போற்றுதும்..ஞாயிறு போற்றுதும்..
இனிய ஞாயிறு காலை வணக்கம்..
என்ன நட்புகளே இன்று முதல் தமிழ்நாட்டில்
எங்கு பார்த்தாலும் "காஜல் அகர்வால்" வருகையாமே..
அதாங்க "தடையில்லா மின்சாரமாமே"..
எப்புடின்னு கேட்குறீங்களா?...
சமீபத்தில் வெளி வந்த படங்களில் தடையில்லா மின்சாரமாக,
காஜல் அகர்வாலை உருவகப்படுத்திய கவிஞர்கள்..
"ஜில்லா" திரைப் படத்தில் கவிஞர் வைரமுத்து,
"கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு"
பாடலில், காஜலை வர்ணித்து  எழுதிய வரிகள்..
"தடையில்லா மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே.." எனவும்..
அதே போல், "ஆல் இன் ஆல் அழகுராஜா"
திரைப் படத்தில் கவிஞர் நா.முத்துக்குமார்,
"யாருக்கும் சொல்லாம.."
பாடலில், காஜலை வர்ணித்து  எழுதிய வரிகள்..
"தடையில்ல மின்சாரம் போல்
தினந்தோறும் வந்தாயே.." எனவும்..
அப்ப "தடையில்லா மின்சாரம்" நம்ம காஜல் 
பொண்ணுதானே..

பாட்டுக்கு பாட்டெடுத்து - படகோட்டி (1964)



பாட்டுக்குப் பாட்டெடுத்து
படம் : படகோட்டி (1964)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா 
இயற்றியவர் : வாலிபக் கவிஞர் வாலி
இசை : மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.இராமமூர்த்தி 

பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ?
துள்ளி விழும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ?
பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ?
துள்ளி விழும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ?

கொத்தும் கிளி இங்கிருக்க
கோவைப் பழம் அங்கிருக்க
கொத்தும் கிளி இங்கிருக்க..ஹோய்..
கோவைப் பழம் அங்கிருக்க
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ?
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ?
கொத்தும் கிளி இங்கிருக்க
கோவைப் பழம் அங்கிருக்க..ஹோய்..
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ?

இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக
இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு
இல்லாத ஆசையிலே என் மனச ஆடவிட்டான்
ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டுப் போனானே
ஓடம் விட்டுப்  போனானே..
ஹோய்..ஹோய்..ஓடம் விட்டுப்  போனானே
ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு

மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து
பின்னலாய் ஜடைப் போட்டு என் மனச எடைப் போட்டு
மீன் புடிக்க வந்தவளே நான் புடிக்கப் போனேனே
மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே
ஆசைக்கு ஆசை வச்சேன்
நான் அப்புறந்தான் காதலிச்சேன்..ஹோய்..
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு

வாழைப்பூத்  திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து
ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு
ஏத்தி வச்ச கைகளிலே என் மனசை நான் கொடுத்தேன்
நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க
நான் மட்டும் இங்கிருக்க...ஓ..ஓ..நான் மட்டும் இங்கிருக்க

தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க
சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி  சொல்ல மாட்டாயோ?

பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ?
சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ?
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ?
ஓ..ஓ..ஓ....

Friday, 30 May 2014

ஆஹா மெல்ல நட மெல்ல நட - புதிய பறவை (1964)



ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
படம் : புதிய பறவை (1964)
பாடியவர் : டி.எம். சௌந்தராஜன்
இசை : மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்

ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்
ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ…
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

படுக்கையை இறைவன் விரித்தான்
வரும் பனித்திரையால் அதை மறைத்தான்
படுக்கையை இறைவன் விரித்தான்
வரும் பனித்திரையால் அதை மறைத்தான்
பருவத்தில் ஆசையைக் கொடுத்தான்
வரும் நாணத்தினால் அதை தடுத்தான்
வரும் நாணத்தினால் அதை தடுத்தான்
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு
அதில் அழகிய மேனியின் நடிப்பு
அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு
அதில் அழகிய மேனியின் நடிப்பு
படப்படவென வரும் துடிப்பு
இன்று பதுங்கியதே என்ன நினைப்பு
இன்று பதுங்கியதே என்ன நினைப்பு
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்
ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ…
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

திருமணம் என்றதும் அடக்கம்
கண்கள் திறந்திருந்தாலும் உறக்கம்
வருவதை நினைத்தால் நடுக்கம்
பக்கம் வந்து விட்டாலோ மயக்கம்
பக்கம் வந்து விட்டாலோ மயக்கம்
ஹையோ மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்
ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ…
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

Thursday, 29 May 2014

அற்றைத் திங்கள் வானிடம்.. - சிவப்பதிகாரம் (2006)



அற்றைத் திங்கள் வானிடம்
படம் : சிவப்பதிகாரம் (2006)
பாடியவர் : மதுபாலகிருஷ்ணன, சுஜாதா
பாடலாசிரியர்  : யுகபாரதி
இசையமைப்பாளர் : வித்யாசாகர்


அற்றைத் திங்கள் வானிடம் 
அல்லிச் சென்டோ நீரிடம் 
சுற்றும் தென்றல் பூவிடம் 
சொக்கும் ராகம் யாழிடம் 
காணுகின்ற காதல் என்னிடம் 
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம் 

அற்றைத் திங்கள் வானிடம் 
அல்லிச் சென்டோ நீரிடம் 

சுற்றும் தென்றல் பூவிடம் 
சொக்கும் ராகம் யாழிடம் 

காணுகின்ற காதல் என்னிடம் 
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம் 

அடிதொட முடிதொட ஆசைப் பெருகிட நேரும் பலவித பரிபாஷை 
பொடி பட பொடி பட நாணம் பொடி பட 
கேட்கும் மனதினில் உயிரோசை 

முடி தொட முகம் தொட மோகம் மூழ்கிட 
வேர்க்கும் முதுகினில் இதிகாசம் 
உருகிட உருகிட ஏக்கம் உருகிட கூடும் அனலிது குளிர் வீசும் 

குலுங்கினேன் உடல் கூசிட கிறங்கினேன் விரல் மேய்ந்திட
மயங்கினேன் சுகம் சேர்ந்திட தளும்பினேன் எனை நீ தொட பாய்ந்திட ஆய்ந்திட 

காணுகின்ற காதல் என்னிடம் 
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம் 

அற்றை திங்கள் வானிடம் 
அல்லி சென்டோ நீரிடம் 

சுற்றும் தென்றல் பூவிடம் 
சொக்கும் ராகம் யாழிடும் 

காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம் 

உடல் எது உடை எது தேடும் நிலை இது காதல் கடனிது அடையாது 
இரவெது பகலேது தேங்கும் சுகமிது சாகும் வரையிலும் முடியாது 

கனவெது நினைவெது கேட்கும் பொழுதிது காமப்பசி வரை அடங்காது 
வலமெது இடமெது வாட்டும் கதையிது தீண்டும் வரையிலும் விளங்காது 

நடுங்கலாம் குளிர் வாடையில் அடங்கலாம் உனது ஆடையில் 
தயங்கலாம் இடைவேளையில் உறங்கலாம் அதிகாலையில் கூடலில் ஊடலில்

காணுகின்ற காதல் என்னிடம் 
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

சில்லென்ற தீப்பொறி ஒன்று - தித்திக்குதே (2003)



சில்லென்ற தீப்பொறி ஒன்று

படம் : தித்திக்குதே (2003)
பாடியவர் : சுஜாதா
இயற்றியவர் : கவிஞர் வைரமுத்து
இசை : வித்யாசாகர்

சில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென
சர சர சரவென பரவுது நெஞ்சில் பார்த்தாயா?
இதோ உன் காதலன் என்று
விறு விறு விறுவென கல கல கலவென
அடி மன வெளிகளில் ஒரு நொடி நகருது கேட்டாயா?
உன் மெத்தையில் தலை சாய்கிறேன்
உயிர் என்னையே தின்னுதே
உன் ஆடைகள் நான் சூடினேன்
என்னென்னவோ பண்ணுதே

தித்திக்குதே... தித்திக்குதே...
தித்திக்குதே... தித்திக்குதே...
தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நா நன நன நா
தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நா நன நன நா

சில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென
சர சர சரவென பரவுது நெஞ்சில் பார்த்தாயா?

கண்ணா உன் காலணி உள்ளே என் கால்கள் நான் சேர்ப்பதும்
கண்மூடி நான் சாய்வதும் கனவோடு நான் தோய்வதும்

கண்ணா உன் கால் உறை உள்ளே என் கைகள் நான் தோய்ப்பதும்
உள்ளூற தேன் பாய்வதும்
உயிரோடு நான் தேய்வதும்

முத்துப் பையன் தேனீர் உண்டு மிச்சம் வைக்க கோப்பைகளும்
தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும்
மூக்கின் மேலே முகாமிடும் கோபங்களும் ஓ...ஓ..ஓ...

தித்திக்குதே... தித்திக்குதே...
தித்திக்குதே... தித்திக்குதே...

அன்பே உன் புன்னகை கண்டு எனக்காகத் தான் என்று
இரவோடு நான் எறிவதும் பகலோடு நான் உறைவதும்

நீ வாழும் அறை தன்னில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு
நுரையீரல் பூ மலர்வதும் நோய் கொண்டு நான் அழுவதும்

அக்கம் பக்கம் நோட்டம் விட்டு ஆளைத் தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் முட்டும் வார்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும் ஓ...ஓ..ஓ...

தித்திக்குதே.... தித்திக்குதே...
தித்திக்குதே.... தித்திக்குதே...
தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நா நன நன நா
தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நா நன நன நா


Wednesday, 28 May 2014

ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் - பொன்னூஞ்சல் (1973)



ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல்...
படம் : பொன்னூஞ்சல் (1973)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்

ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா

ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

ஓ ஓ....ஓ ஓ....ஓ ஓ....
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச்செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச்செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
மீனாவின் குங்குமத்தை
மீனாவின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா

பால்வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
பால்வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
ஊராரின் சன்னதியில் ஒன்றாக வேண்டுமம்மா
தாயென்றும் சேயென்றும் தந்தையென்றும் ஆவோமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

கண்ணென்றும் வளை கொண்ட கை என்றும்
இவள் கொண்ட அங்கங்கள் நீ காணும் சின்னங்கள்

பொன்மாலை அந்தியிலே என் மானைத் தேடி வரும்
அம்மா உன் பெண்ணுள்ளம் நாணம் சொல்லி ஆடி வரும்

ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆ...ஆ
ஆ....ஆ..ஆ....ஆ..ஆ....ஆ..ஆ....ஆ


Friday, 23 May 2014

பெண்ணே நீயும் பெண்ணா?..- பிரியமான தோழி (2003)



பெண்ணே நீயும் பெண்ணா?..
படம் : பிரியமான தோழி (2003)
பாடியவர்கள் : உன்னிமேனன் - கல்பனா 
இசை : எஸ்.ஏ.இராஜ்குமார் 
இயற்றியவர் : கவிஞர் பா.விஜய் 

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
ஒரு மூன்றாம் பிறையைச் சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பனிப் பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்

புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை
உந்தன் மேனி என்று உனக்குத் தெரியுமா?

சீன சுவரைப் போலே எந்தன் காதல் கூட
இன்னும் நீளம் ஆகும் உனக்கு தெரியுமா?

பூங்கா என்ன வாசம் இன்று உந்தன் மீதுதெரியும்

தங்கம் என்ன வண்ணம் என்று உன்னைப் பார்க்கத் தெரியும்
காதல் வந்த பின்னாலே கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்

கம்பன் ஷெல்லி சேர்ந்து தான் கவிதை எழுதியது
எந்தன் முன்பு வந்து தான் பெண்ணாய் நிற்கிறது
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்.. காவியம்

மழை வந்த பின்னால் வானவில்லும் தோன்றும்
உன்னைப் பார்த்த பின்னால் மழை தோன்றுதே

பூக்கள் தேடித் தானே பட்டாம் பூச்சி பறக்கும்
உன்னைத் தேடி கொண்டு பூக்கள் பறந்ததே

மின்னும் வெண்மை என்ன என்று மின்னல் உன்னை கேட்கும்

எங்கே தீண்ட வேண்டும் என்று தென்றல் உன்னைக் கேட்கும்
உன்னைப் ர்த்த பூவெல்லாம் கையெழுத்து கேட்டு நிற்கும்

நீ தான் காதல் நூலகம் சேர்ந்தேன் புத்தகமாய்
நீ தான் காதல் பூ மழை நனைந்தேன் பாத்திரமாய்

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்

அரை நொடி தான் என்னைப் பார்த்தாய்
ஒரு யுகமாய் தோன்ற வைத்தாய்
பனித் துளியாய் நீயும் வந்தாய்
பாற் கடலாய் நெஞ்சில் தோன்றினாய்

பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது
http://youtu.be/wKpRABCiYpM

Thursday, 22 May 2014

சொல்லித்தரவா சொல்லித்தரவா - மஜா (2005)



சொல்லித்தரவா சொல்லித்தரவா
படம் : மஜா (2005)
பாடியவர்கள் : சாதனா சர்கம் - மது பாலகிருஷ்ணன்
இசை : வித்யாசாகர்

சொல்லித்தரவா சொல்லித்தரவா
மெல்ல மெல்ல வா வா வா அருகே..

அள்ளித்தரவா அள்ளித்தரவா
அள்ள அள்ள தீராதே அழகே..

உன்னை நினைத்தேன் நித்தம் தவித்தேன்
தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே

அள்ளித்தரவா அள்ளித்தரவா
அள்ள அள்ள தீராதே அழகே

ல.ல..லா..ந.ந...நா..
காதல் தொட்டில் பழக்கம்
நீளும் கட்டில் வரைக்கும்
காமன் வீட்டுத் தாழ் திறக்கும்
ஆண் பெண் உள்ள வரைக்கும்
காதல் கண்ணை மறைக்கும்
தீயில் கூட தேனிருக்கும்
காதல் மழை தூறுமே கட்டில் கப்பல் ஆடுமே
பெண்மை தடுமாறுமே மானம் கப்பலேறுமே
ஏட்டுப்பாடங்கள் ஏதும் இல்லாத வீட்டுப் பாடம் இது

சொல்லித்தரவா.. சொல்லித்தரவா
மெல்ல மெல்ல வா வா வா அருகே
அள்ளித்தரவா..வா.வா..அள்ளித்தரவா
அள்ள அள்ள தீராதே அழகே

ஆசை யாரை விட்டது நாணம் கும்மி கொட்டுது
மோகம் என்னும் முள் தைத்தது
வார்த்தை உச்சுக் கொட்டுது பார்வை பச்சைக் குத்துது
தேகம் எங்கும் தேள் கொட்டுது
பார்வை என்னைத் தீண்டுமே கைகள் எல்லைத் தாண்டுமே
பூவைத் தொடும் நேரமே புத்தி மாறிப் போகுமே
இங்கே என் காதில் சொல்லும் எல்லாமே
எங்கே நீ கற்றது

சொல்லித்தரவா.... ஹா..... சொல்லித்தரவா
மெல்ல மெல்ல வா வா வா அருகே
அள்ளித்தரவா.. அள்ளித்தரவா
அள்ள அள்ள தீராதே அழகே
உன்னை நினைத்தேன் நித்தம் தவித்தேன்
தள்ளித் தள்ளி போகாதே உயிரே..

Wednesday, 21 May 2014

பிடிக்கும் உன்னைப் பிடிக்கும் - ஆழ்வார் (2007)



பிடிக்கும் உன்னைப் பிடிக்கும்
படம் : ஆழ்வார் (2007)
பாடியவர்கள் : மதுஸ்ரீ
இசை : ஸ்ரீகாந்த் தேவா
இயற்றியவர் : வாலி

பிடிக்கும் உன்னைப் பிடிக்கும்
அழகா உன்னைப் பிடிக்கும்
ஆகாய வெண்ணிலவைப்  பிடிக்கும்
ரொம்ப பிடிக்கும்
பிடிக்கும் உன்னைப் பிடிக்கும்
அழகா உன்னைப் பிடிக்கும்
ஆகாய வெண்ணிலவைப் பிடிக்கும்
ரொம்ப பிடிக்கும்

அழகாய்  இருக்காய் எனக்கு பிடிக்கும்
அழகான சிரிப்பை உலகக்கு பிடிக்கும்
அழகாய் அணைப்பாய் எனக்கு பிடிக்கும்
அழகான தமிழை உலகக்கு பிடிக்கும்
பிடிக்கும் உன்னைப் பிடிக்கும்
அழகா உன்னைப் பிடிக்கும்
ஆகாய வெண்ணிலவைப்  பிடிக்கும்
ரொம்ப பிடிக்கும்
பிடிக்கும் உன்னைப் பிடிக்கும்
அழகா உன்னைப் பிடிக்கும்
ஆகாய வெண்ணிலவைப்  பிடிக்கும்
ரொம்ப பிடிக்கும்

காபுல் திராட்சைப் போன்ற
கண்கள் பிடிக்கும்
காஷ்மீர் ஆப்பிள் போன்ற
கன்னம் பிடிக்கும்
ரோஜாப்பூ போன்ற உன்
தேகத்தைப் பிடிக்கும்
ரேஸ் காரைப் போன்ற உன்
வேகத்தைப் பிடிக்கும்
தங்கம் போல் இருக்கும்
உன் தோளைப் பிடிக்கும்
தங்கம் போல் மின்னிடும்
உன் மார்பைப் பிடிக்கும்
உன்னோடப் பார்வை
ஒவ்வொன்றும் பிடிக்கும்
உன்னோட வார்தைகள்
எல்லாமேப் பிடிக்கும்

சின்னப் பிள்ளை போன்ற
உள்ளம் பிடிக்கும்
நீ கொஞ்சும் போது
சொல்லும் பொய்கள் பிடிக்கும்
அன்றாடம் நீ செய்யும்
இம்சைகள் பிடிக்கும்
அங்கங்கே நீ வைக்கும்
இச்சுக்கள் பிடிக்கும்
கன்னத்தில் செய்யும்
காயங்கள் பிடிக்கும்
காயங்கள் சொல்லிடும்
தேகங்கள் பிடிக்கும்
அப்பப்போ நேரும்
ஊடல்கள் பிடிக்கும்
ஊடல்கள் தீர்ந்ததும்
கூடல்கள் பிடிக்கும்

பிடிக்கும் உன்னைப் பிடிக்கும்
அழகா உன்னைப் பிடிக்கும்
ஆகாய வெண்ணிலவைப்  பிடிக்கும்
ரொம்ப பிடிக்கும்
பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்.
பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்.
பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்.
பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்..
ம்ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…

முத்துக் குளிக்க வாரீகளா - அனுபவி ராஜா அனுபவி (1967)



முத்துக் குளிக்க வாரீகளா..
படம் : அனுபவி ராஜா அனுபவி (1967)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - எல்.ஆர்.ஈஸ்வரி  - நாகேஷ்
இயற்றியவர் : கவியரசர் கண்ணதாசன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

முத்துக் குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா
முத்துக் குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா
சிப்பி எடுப்போமா...மாமா.மாமா
அம்மளுக்கும் சொந்தமில்லையோ
சிப்பி எடுப்போமா...மாமா.மாமா
அம்மளுக்கும் சொந்தமில்லையோ
முத்துக் குளிக்க வாரீகளா
ஏளா முத்தம்மா ஓம்மனசு எம்புட்டு
எங்கிட்டத்தான் சொல்லுடியம்மா...மாமா.. 
ஏளா முத்தம்மா ஓம்மனசு எம்புட்டு
எங்கிட்டத்தான் சொல்லுடியம்மா...
நாளா நாளுமில்ல முத்தெடுக்க
நம்மளை நீ கூப்பிட்ட தென்னடியம்மா..
நாளா நாளுமில்ல முத்தெடுக்க
நம்மளை நீ கூப்பிட்ட தென்னடியம்மா..
முத்துக் கொடுக்க வாரீயளா..
கத்துக் கொடுக்க வாரீயளா
சங்கு பறிப்போமா ஏளா ஏளா
அம்மளுக்குச் சொந்தமில்லையோ
முத்துக் குடுக்க வாரீயளா...

ஆளான பொண்ணுக பாக்கு வைக்கும் முன்னமே
என்னவென்னு சொல்லுவாக - ஆ
ஆளான பொண்ணுக பாக்கு வைக்கும் முன்னமே
என்னவென்னு சொல்லுவாக - ஆ
அட கோளாறு பண்ணாம சித்த வந்து கொஞ்சுங்க
சினிமாவில்  கொஞ்சறாப்பல
காத்தவராயனை ஆரியமாலா
காதலிச்ச மாதிரியல்லா
காத்தவராயனை ஆரியமாலா
காதலிச்ச மாதிரியல்லா
ஜிஞ்சின்னாக்கடி ஜிஞ்சினாக்கடி
பார்த்தீங்க்களே நீங்க்களும்
அந்தச்சரசம் பண்ணிப்பாருங்க்க
ஜிஞ்சின்னாக்கடி ஜிஞ்சினாக்கடி
பார்த்தீங்க்களே நீங்க்களும்
அந்தச்சரசம் பண்ணிப்பாருங்க்க

முத்துக் குடுக்க வாரீயளா
கத்துக் கொடுக்க வாரீயளா
முத்துக் குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா

Tuesday, 20 May 2014

இனிய நற்காலை வணக்கம்..
நேற்று மாலை ஒரு நண்பர், (மாற்றுக்
கட்சியைச் சார்ந்தவர்), கிண்டலாக என்னிடம்,
"என்னங்க?.. உங்க கட்சி இப்படித் தோற்றுப்
போச்சேன்னு?" கேட்டார்..
நான் உடனே ஏங்க, "உங்கத் தலைவி ஜெயலலிதா தலைமயிலான கூட்டணி கடந்த 2004 நாடாளுமன்றத்தேர்தலில் - போட்டியிட்ட புதுவை உள்ளிட்ட 40 தொகுதி களிலும் படுதோல்வி அடைந்தது. அப்போது அவர் - தேர்தல் தீர்ப்புக் குறித்துக் கருத்து தெரிவித்த ஜெலலிதா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ""ஜனநாயகப் படுகொலை நடந்ததாகவும், மோசடித் தனத்தில் விளைந்த வெற்றி"" என்றும் அராஜக உணர்வோடு மக்கள் தீர்ப்பைக் காலில் போட்டு மிதிக்கிற வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.
தலைமைச்செயலகத்தில் நிருபர்களைச் சந்தித்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து கருத்துக் கூறும்போது, ""எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் நடந்த பெரிய அளவிலான தில்லு முல்லுதான் எங்களது தோல்விக்குக் காரணம். சில கருவிகள் என்னிடம் காட்டப்பட்டன. செயல்முறையும் செய்துகாட்டப்பட்டது. நீங்கள் எந்தக் கட்சி சின்னத்தில் பட்டனை அழுத்தினாலும், இது உதய சூரியன் சின்னத்துக்கே பதிவாகி இருக்கிறது. இதேபோல பல தில்லு முல்லுகள் நடந்துள்ளன. இதைப் போன்ற தேர்தல் தில்லு முல்லுகளை ஒழிக்க வேண்டுமென்றால் நாம் பழைய வாக்குப் பெட்டியில் வாக்குச்சீட்டுகளைப் போட்டு பதிவு செய்யும் முறையைப் பின்பற்ற வேண்டும்"" என்று கூறினார்.
மேலும், ""நிருபர்கள் ""கடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு நீங்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள்?"" என்று கேட்டதற்கு ஜெயலலிதா, ""2001 சட்டமன்றத் தேர்தலில் என்னைத் தேர்தலில் நிற்கவிடாமல் சதி செய்துவிட்டதால் தேர்தலில் நிச்சயம் தோற்றுவிடுவார்கள் என்று தப்புக்கணக்கு போட்ட தி.மு.க.வினர் மெத்தனமாக விட்டுவிட்டார்கள். ஆனால் நான் கடுமையாக பட்டிதொட்டி எங்கும் பிரச்சாரம் செய்து வாக்குக் கேட்டு மகத்தான வெற்றியைப் பெற்றேன். இது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனவேதான், இந்தத் தேர்தலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன தில்லு முல்லு செய்ய வேண்டுமோ அதை செய்து முடித்துவிட்டார்கள்.
அதனால்தான் இந்தத் தேர்தல் முடிவு இப்படி அமைந்துவிட்டது. "" என்று கூறினார். (தினத்தந்தி 23.7.2004). நாடாளுமன்றத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தேர்தல் ஆணையத்தைக் கொச்சைப் படுத்துகிற வகையில் கருத்துக் கூறியதோடு முதலமைச்சர் ஜெயலலிதா நிற்காமல், வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு செய்ய முடியும் என்பதை நிரூபிக்கத் தயார் என்று தேர்தல் ஆணையத்துக்கு அ.தி.மு.க. சார்பில் கடிதம் எழுதப்பட்டது.
இதில், ""தேர்தல் முடிந்த பிறகு இந்தக் கருவியைப் பாதுகாப்பான அறையில் வைப்பதைத் தடுக்க வேண்டும். ஏனெனில், ரிமோட் கண்ட்ரோல் முறையின் மூலம் சிலர் ஒரு கட்சிக்குச் சாதகமாக விழுந்த ஓட்டுகளை மற்றொரு கட்சிக்குச் சாதகமாகப் பதிவு செய்யும் வகையில் மாற்றிவிட முடியும் "" என்று குற்றச்சாட்டை எழுப்பி, ""அதை நிரூபிக்கத் தயார்"" என்று குறிப்பிட்டிருந்தார்". அதை கொஞ்சம் நினைச்சுப் பாருங்கோ..இப்ப நீங்க ப்ரவீன்குமாருடன் சேர்ந்து என்ன செய்தீர்களோ? என மக்கள் முணுமுணுக்கத் தொடங்கி விட்டனர் என்றேன்..அந்நபர் அதற்குப் பின், என் முன் நிற்க வில்லை..

ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா - ஸ்டார் (2001)



ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா
படம் : ஸ்டார் (2001)
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியன் - சுஜாதா
இயற்றியவர் : கவிஞர் வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா
ரசிகா ரசிகா எனை திருடிப் போன திரு ரசிகா

ம்...என் ரசிகா ரசிகா ரசிக ரசிகா பெண் ரசிகா
ஓ ரசிகா ரசிகா எனை திருடிப் போன திரு ரசிகா

ஓ..ஹொ..ஹோ..ஓ..ஹொ..ஹோ..
ஓ..ஹொ..ஹோ..ஓ..ஹொ..ஹோ..

என் ரசிகா ரசிகா ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஓ ரசிகா ரசிகா எனை திருடிப்  போன திரு ரசிகா
பெண் ரசிகா ரசிகா ரசிக ரசிக திரு ரசிகா
ஓ ரசிகா ரசிகா எனை வசியம் செய்து போன ரசிகா

இவள் நடக்கும் நடையிலே நிலம் சிவக்கும்
அதன் மணம் இனிக்கும் (இசை)
இவள் நின்று நிமிர்ந்ததும் வானில் விழா
அது வானவில்லா இல்லை வசந்த வில்லா
ஹா..என் ரசிகா ரசிகா ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஓ ரசிகா ரசிகா எனை திருடி போன திரு ரசிகா

அந்த எகிப்தின் மம்மியும் இமை திறக்கும்
இவள் கொஞ்சம் சிரித்தாள் அது உயிர் பிழைக்கும்
நிலமெங்கே நிலமெங்கே
இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே
ஊஞ்சல் ஆடுதே ஆடுதே
இரு பிறையில் ஏஞ்சல் துள்ளி ஆடுதே

ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா
ரசிகா ரசிகா பெண்ணை திருடி போன திரு ரசிகா  (இசை)

ஹா..என் ரசிகா ரசிகா ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஓ ரசிகா ரசிகா எனை திருடி போன திரு ரசிகா

ஓ..ஹொ..ஹோ..ஓ..ஹொ..ஹோ..

என் ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா
ஓ ரசிகா ரசிகா எனை திருடி போன திரு ரசிகா

பெண் ரசிகா ரசிகா ரசிக ரசிக திரு ரசிகா
ஓ ரசிகா ரசிகா எனை வசியம் செய்து போன ரசிகா

இவள் நடக்கும் நடையிலே நிலம் சிவக்கும்
அதன் மணம் இனிக்கும் (இசை)
இவள் நின்று நிமிர்ந்ததும் வானில் விழா
அது வானவில்லா இல்லை வசந்த வில்லா

அந்த எகிப்தின் மம்மியும் இமை திறக்கும்  
இவள் கொஞ்சம் சிரித்தாள் அது உயிர் பிழைக்கும்
நிலமெங்கே நிலமெங்கே
இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே
ஊஞ்சல் ஆடுதே ஆடுதே
இவள் காதோரம் மாநாடு பூக்கள் கூட்டம் போடுதே
எட்டி பிடிக்க கட்டி இருக்க மின்னல்
வடமும் பிடித்து வலை வீசுதே....

ரசிக ரசிக உன் ரசிக ரசிக பெண் ரசிக ரசிக உன் ரசிகா..
ரசிக ரசிக உன் ரசிக ரசிக பெண் ரசிக ரசிக உன் ரசிகா..
ரசிக ரசிக உன் ரசிக ரசிக பெண் ரசிக ரசிக உன் ரசிகா..
ரசிக ரசிக உன் ரசிக ரசிக பெண் ரசிக ரசிக உன் ரசிகா..

ஓ..ஹொ..ஹோ..ஓ..ஹொ..ஹோ..

ரசிக ரசிக உன் ரசிக ரசிக பெண் ரசிக ரசிக உன் ரசிகா..
ரசிக ரசிக உன் ரசிக ரசிக பெண் ரசிக ரசிக உன் ரசிகா..

அந்த மும்தாஜின் எழில் சொன்ன ஓர் வார்த்தை தான்
இன்னும் ஆக்ராவில் பளிங்கோடு ஒலிக்கின்றதே

அந்த ஆதாமின் உயிர் சுட்ட ஒரு வார்த்தை தான்
இன்னும் ஆறாமல் சுகமாக கொதிக்கின்றதே

கடும் விஷம் கூட கரும்பாக சுவைக்கின்றதே
காதல்  சோகத்தை சோப்பின்றி துவைக்கின்றதே
ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா
ரசிகா ரசிகா ரசிகா } (Over lap)

ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா
ரசிகா ரசிகா பெண்ணை திருடிப் போன திரு ரசிகா

இரு பிறையில் ஏஞ்சல் துள்ளி ஆடுதே
இவள் காதோரம் மாநாடு பூக்கள் கூட்டம் போடுதே
எட்டி பிடிக்க கட்டி இருக்க மின்னல்
வடமும் பிடித்து வலை வீசுதே....

ரசிக ரசிக உன் ரசிக ரசிக பெண் ரசிக ரசிக உன் ரசிகா..
ரசிக ரசிக உன் ரசிக ரசிக பெண் ரசிக ரசிக உன் ரசிகா..


ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா
ரசிகா ரசிகா ரசிகா... } (Over lap)

ரசிகா ஹா...ரசிகா... (இசை)

ச ச ரி ரி ம ம  ப த நி த   ப த நி த ப த நி த ச
ச ச ரி ரி ம ம ப த நி த    ப த நி த ப த நி த ச

உளி தேடல்கள் இல்லாமல் சிலையே இல்லை
விழி தேடல்கள் இல்லாமல் காதல் இல்லை
மழைத் தூறல்கள் தேடல்கள் மண்ணைத் தொடும்
மன வேர் தேடும் தேடல்கள் பெண்ணைத் தொடும்
தனக்குள்ளே ஓர் தேடல்கள் ஞானம் தரும்
பேனா மை கொண்ட தேடல்கள் கவிதை தரும்
விரல் கொண்டாடும் தேடல்கள் இசையைத் தரும் ,
விதைக் கொண்டாடும் தேடல்கள் விடியல் தரும்
விரல் கொண்டாடும் தேடல்கள் இசையைத் தரும் ,
விதைக் கொண்டாடும் தேடல்கள் விடியல் தரும்
தேடல் விடியல் தரும்..தேடல் விடியல் தரும்
தேடல் விடியல் தரும்..தேடல் விடியல் தரும்

ரசிக ரசிக உன் ரசிக ரசிக பெண் ரசிக ரசிக உன் ரசிகா..
ரசிக ரசிக உன் ரசிக ரசிக பெண் ரசிக ரசிக உன் ரசிகா..
ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா
ரசிகா ரசிகா பெண்ணை திருடி போன திரு ரசிகா
ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா
ரசிகா ரசிகா பெண்ணை திருடி போன திரு ரசிகா
ரசிக ரசிக உன் ரசிக ரசிக பெண் ரசிக ரசிக உன் ரசிகா..
ரசிக ரசிக உன் ரசிக ரசிக பெண் ரசிக ரசிக உன் ரசிகா..
ரசிக ரசிக உன் ரசிக ரசிக பெண் ரசிக ரசிக உன் ரசிகா..
ரசிக ரசிக உன் ரசிக ரசிக பெண் ரசிக ரசிக உன் ரசிகா..
ரசிக ரசிக உன் ரசிக ரசிக பெண் ரசிக ரசிக உன் ரசிகா..
ரசிக ரசிக உன் ரசிக ரசிக பெண் ரசிக ரசிக உன் ரசிகா..

Monday, 19 May 2014

சின்னவளை முகம் சிவந்தவளை நான் - புதியபூமி (1968)



சின்னவளை முகம் சிவந்தவளைநான்
படம் : புதியபூமி (1968)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

சின்னவளை முகம் சிவந்தவளை நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
சின்னவளை முகம் சிவந்தவளை நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு

வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
பூங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப் போல் பூப் போல் தொட்டு

தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை
மெல்லத் தொட்டால் தொட்டால் துவளும்
தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை
மெல்லத் தொட்டால் தொட்டால் துவளும்
பால் மழலை மொழி படித்தவளை
சுகம் பட்டால் பட்டால் படியும்

கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
இரு கண்ணால் சொன்னால் பக்கம்
வந்தால் தந்தால் நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ

வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு

வான மழைப் போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறப்பாய்
வான மழைப் போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறப்பாய்
நீ அவளை விட்டுப் போகும் வரை
அது இங்கே இங்கே இருக்கோ

மின்னும் கை வளை மிதக்கும்
பெண்களை அசைத்தால் அசையாதோ
மின்னும் கை வளை மிதக்கும்
பெண்களை அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று
பெண்ணைக் கெஞ்சும் வரை சுவைத்தால் சுவைக்காதோ

வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொண்டாய் வளையிட்டு
பூங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப் போல் பூப் போல் தொட்டு
சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொண்டேன் கரம் தொட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொண்டேன் வளையிட்டு


Saturday, 17 May 2014

மனம் விரும்புதே உன்னை... உன்னை - நேருக்கு நேர் (1997)



மனம் விரும்புதே உன்னை... உன்னை
படம் நேருக்கு நேர் (1997)
பாடியவர் : ஹரிணி
இசையமைப்பாளர் : தேனிசை தேவா
இயற்றியவர் : கவிஞர் வைரமுத்து

மனம் விரும்புதே உன்னை... உன்னை
மனம் விரும்புதே உன்னை.
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே உன்னை... உன்னை
மனம் விரும்புதே உன்னை.

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும் காண.... மனம் ஏங்குதே...
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே உன்னை...
மனம் விரும்புதே உன்னை....உன்னை

மனம் விரும்புதே உன்னை....உன்னை
மனம் விரும்புதே உன்னை....

மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா
சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே...
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே
என் காதலா...! என் காதலா.....!
நீ வா! நீ வா! என் காதலா...!
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே உன்னை... உன்னை
மனம் விரும்புதே உன்னை.

மன்றம் வந்த தென்றலுக்கு.. - மௌன ராகம் (1986)



மன்றம் வந்த தென்றலுக்கு 
படம் : மௌன ராகம் (1986)
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியன் 
பாடல் : கவிஞர் வாலி 
இசை : இசைஞானி இளையராஜா...
நடிப்பு : மோகன், ரேவதி 

ஆ.ஆ..ஆ...ஆஆ..ஆஆ..ஆஆ ஆஆ 
மன்றம் வந்த தென்றலுக்கு 
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ? 
அன்பே என் அன்பே 
தொட்ட உடன் சுட்டதென்ன? 
கட்டழகு வட்ட நிலவோ? 
கண்ணே என் கண்ணே 
பூபாளமே.. கூடாதென்னும் 
வானம் உண்டோ? சொல் 
மன்றம் வந்த தென்றலுக்கு 
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ? 
அன்பே என் அன்பே 

மன்றம் வந்த தென்றலுக்கு 
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ? 
அன்பே என் அன்பே 

மேடையைப்  போலே வாழ்கை அல்ல.. 
நாடகம் ஆனதும் விலகிச்செல்ல.. 
ஒடையைப்  போலே உறவும் அல்ல.. 
பாதைகள் மாறியே பயணம் செல்ல.. 
விண்ணோடுதான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும் 
என்னோடு நீ வந்தால் என்ன? வா....

மன்றம் வந்த தென்றலுக்கு 
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ 
அன்பே என் அன்பே 
தொட்ட உடன் சுட்டதென்ன? 
கட்டழகு வட்ட நிலவோ 
கண்ணே என் கண்ணே 
பூபாளமே கூடாதென்னும் 
வானம் உண்டோ? சொல்.. 
மன்றம் வந்த தென்றலுக்கு 
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ 
அன்பே என் அன்பே 

தாமரை மேலே நீர் துளிப் போல் 
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன? 
நண்பர்கள் போலே வாழ்வதற்கு 
மாலையும் மேளமும் தேவையென்ன? 
சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல் 
பூவே உன் வாழ்கை தான் என்ன? சொல்.. 

மன்றம் வந்த தென்றலுக்கு 
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ 
அன்பே என் அன்பே 
தொட்ட உடன் சுட்டதென்ன? 
கட்டழகு வட்ட நிலவோ 
கண்ணே என் கண்ணே 
பூபாளமே கூடாதென்னும் 
வானம் உண்டோ? சொல்.. 
மன்றம் வந்த தென்றலுக்கு 
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ? 
அன்பே என் அன்பே

யார் அந்த நிலவு - சாந்தி (1965)



யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
படம்: சாந்தி (1965)
பாடல்: யார் அந்த நிலவு
பாடியவர் : டி எம் சௌந்தரராஜன்
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.இராமமூர்த்தி
வரிகள் : கவியரசர் கண்ணதாசன்

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு

மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை
மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை
தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ
உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ
ஓ…ஓ…கோவில் தீபம் மாறியதை…நீ அறிவாயோ

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு

ஆடிய நாடகம் முடியவில்லை ஒரு நாளிலே
அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே
தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ
இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ
ஓ…ஓ…ஓஹோஹோஹொஹோ…

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு..
நான் வந்த வரவு..

கம்பன் ஏமாந்தான்.. - நிழல் நிஜமாகிறது (1978)



கம்பன் ஏமாந்தான்..
படம் : நிழல் நிஜமாகிறது (1978)
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியன்
இயற்றியவர் : கவியரசர் கண்ணதாசன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

கம்பன் ஏமாந்தான் 
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான் 
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான்..
அம்பு விழி என்று ஏன் சொன்னான் 
அது பாய்வதினால் தானோ
அம்பு விழி என்று ஏன் சொன்னான் 
அது பாய்வதினால் தானோ - அவள்
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் 
அது கொதிப்பதனால் தானோ
கம்பன் ஏமாந்தான்... 

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ

கம்பன் ஏமாந்தான் 
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான்..

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமாந்தேன்..
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே

கம்பன் ஏமாந்தான் 
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான்..கம்பன் ஏமாந்தான்..
கம்பன் ஏமாந்தான்.....

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா - பட்டினப் பிரவேசம் (1977)



வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா.
படம்: பட்டினப் பிரவேசம் (1977)
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசர் கண்ணதாசன்
வயலின் வாசித்தவர்: மணி

லலாலா....லாலா...லலாலா....லாலா..
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா..
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா.
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா..
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா..
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா.
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா.

தெய்வம் கல்லிலா?  ஒரு தோகையின் சொல்லிலா?
தெய்வம் கல்லிலா?  ஒரு தோகையின் சொல்லிலா?
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா?
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?
தீதில்லா காதலா ஊடலா கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா.

வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா!

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் - வீர அபிமன்யு (1965)



பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
படம் : வீர அபிமன்யு (1965)
பாடியவர்கள் : பி.பீ.ஸ்ரீநிவாசன் - பி.சுசீலா
இசையமைப்பாளர் : கே.வி.மகாதேவன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
வசனம் : தலைவர் கலைஞர்

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத்  தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத்  தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
அன்று உனைத்  தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
உனைத்  தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்

கொடித் தேன் இனியங்கள் குடித்தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
கொடித் தேன் இனியங்கள் குடித்தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
துளித் தேன் சிந்தாமல் களித்தேன்
ஒரு துளித் தேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில் அணைத்தேன் அழகினை இரசித்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
உனை தேன் என நான் நினைத்தேன்
அந்த மலை தேன் இவரென மலைத்தேன்

மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன்  
உனக்கென வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன்
உனக்கென வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
இனித் தேன் இல்லாதபடி கதை முடித்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத்  தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைந்தேன்
உலகத்தை நான் இங்கு மறந்தேன்
நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைந்தேன்
உலகத்தை நான் இங்கு மறந்தேன்
உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்
உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
உனை தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்  தேன் இவரென மலைத்தேன்


மலரே மௌனமா மௌனமே வேதமா - கர்ணா (1995)



மலரே மௌனமா மௌனமே வேதமா
படம் : கர்ணா (1995)
பாடியவர்கள் : எஸ்.பி,பாலசுப்பிரமணியம் - எஸ்.ஜானகி
இசை : வித்யாசாகர்
பாடலாசிரியர்:  கவிஞர் வாலி

மலரே மௌனமா
மௌனமே வேதமா?

மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா? அன்பே

மலரே மௌனமா
மௌனமே வேதமா?

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ? அ..ஆ
மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ? ஓ..ஓ..
ஏதோ சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே
ஏதோ சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா?
மார்போடு கண்கள் மூடவா?

மலரே மௌனமா
மலர்கள் பேசுமா?

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே என்னைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
காற்றே என்னைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்க்கை தந்த வள்ளலே

மலரே மௌனமா
மௌனமே வேதமா?

மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா? அன்பே

மலரே ம்.. மௌனமா? ம்ம்..
மௌனமே ம்ம்ம்.. வேதமா? ஆஅ

கல்யாணத் தேன் நிலா - மௌனம் சம்மதம் (1990)



கல்யாணத்  தேன் நிலா
படம் : மௌனம் சம்மதம் (1990)
பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ் - சித்ரா
இசையமைப்பாளர் : இசைஞானி இளையராஜா
இயற்றியவர் : கவிஞர் வாலி

கல்யாணத்  தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாணத்  தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா

கல்யாணத் தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா -
நீ பேசும் பேச்சிலா.

என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர் பலா
உன் சொல்லிலா

கல்யாணத் தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாணத் தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

Friday, 16 May 2014

அத்திக்காய் காய் காய்.. - பலே பாண்டியா (1962)



அத்திக்காய் காய் காய்
படம்: பலே பாண்டியா (1962)
பாடியவர்கள் : டி.எம். சௌந்தரராஜன் - பி.சுசீலா -

                           பி.பி. ஸ்ரீனிவாஸ் - ஜமுனா ராணி
இயற்றியவர்: கவியரசு  கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
என்னுயிரும் நீயல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..

ஓஓஓ.. ஓஓஓ..

கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய் மங்கை எந்தன் கோவைக்காய்
கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய் மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..

ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆஹாஹா ஆஹா ஓஹோஹோ ஹோஹோ ம்ஹ்ம்ம் ம்ம்

காதல் என்னுளே வந்த நேரம் - நேரம் (2013)



காதல் என்னுளே வந்த நேரம்
படம் : நேரம் (2013)
பாடியவர்: இரஞ்சித் கோவிந்த்
இசையமைப்பாளர்: இராஜேஷ் முருகேசன்
இயற்றியவர் : வேல்முருகன்

காதல் என்னுளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்
என் வீட்டை திடலாக்கி விளையாடும் பறவை போல்
மனதின் உள்ளே வந்தாடுவது யாரோ
என் சுவாச அறையாகி எனை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டி செல்வது யாரோ

காதல் என்னுளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்

அர்த்தமில்லா வீணான வார்த்தைகளை
நான் பேசும் வேளையிலும் ரசிப்பாய்
அளவில்லா காதலையும் எந்த சூழலிலும்
நான் கேட்கும் முன்னே தருவாய்
உன் முகதசைகளில் எங்கே வெட்கம் உள்ளதென்று
நீ பேசும் நேரம் எல்லாம் நானும் தேடி பார்ப்பேன்
குளிர் காய்ச்சல் ஏதும் வந்தால் உன்னுள்ளே
நானும் வந்தால் மெதுவாய் சரியாய் அது போகாதா

காதல் என்னுளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்

வாழ்வினிலே உன் மூச்சு தூரத்திலே
உன்னோடு இல்லையென்றால் தவிப்பேன்
வாழும் நாட்களிலும் ஆயுள் முழுதிலும்
உன் வாசத்திலே பிழைப்பேன்
என் பலம் பலவீனம் எல்லாமும் தெரிஞ்சாலும்
உன் அன்பு வந்த பின்னே நாலும் மாறி போகும்
என் குணம் குணவீனம் உன்னோடு சேர்ந்துவிட்டால்
நலமாய் நலமாய் அது மாறாதா


காதல் என்னுளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்
என் வீட்டை திடலாக்கி விளையாடும் பறவை போல்
மனதின் உள்ளே வந்தாடுவது யாரோ
என் சுவாச அறையாகி எனை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டி செல்வது யாரோ

Thursday, 15 May 2014

தேன் தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன் - குருவி (2008)



தேன் தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன்
படம் : குருவி (2008)
பாடியவர்கள் : உதித் நாராயணன் - ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
இயற்றியவர் : யுகபாரதி

தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர்த் தீயை அளந்தேன்
சிவந்தேன்

தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண பயந்தேன்
கரைந்தேன்

என்னவோ சொல்லத் துணிந்தேன்
ஏதேதோ செய்யத் துணிந்தேன்
உன்னோட சேரத்தானே நானும் அலைந்தேன்
தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர்த் தீயை அளந்தேன்
சிவந்தேன்;

அள்ளவரும் கையை ரசித்தேன்
ஆளவரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்

முட்ட வரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்

நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
இதழ் துள்ளாததையும் ரசித்தேன்

நீ செய்யும் யாவும் ரசித்தேன்
நித்தம் செய்யாததையும் ரசித்தேன்
உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன்

தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர்த் தீயை அளந்தேன்
சிவந்தேன்

சேலையில் நிலவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்

திருடனே உன்னை அறிந்தேன்
திருடினாய் என்னை அறிந்தேன்
இன்னும் நீ திருடத்தானே ஆசை அறிந்தேன்

என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்

ஆண் தென்றல் உன்னை அறிந்தேன்
அதில் கூசும் பெண்மை அறிந்தேன்

நீ நடமாடும் திராட்சைத் தோட்டம்
எதிரில் அறிந்தேன்

தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர்த் தீயை அளந்தேன்
சிவந்தேன்

தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண பயந்தேன்
கரைந்தேன்