Tuesday, 13 May 2014

இயற்கை எனும் இளைய கன்னி - சாந்தி நிலையம்



இயற்கை என்னும் இளைய கன்னி
படம் : சாந்தி நிலையம் (1969)
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியன் - பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

பொன்னிறத்து  மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கோ தூது விட்டாள்

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளனீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னையள்ளித் தந்ததாலோ

இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக் கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கு என்ன பேரோ

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

மலையைத்  தழுவி கொள்ளும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெயில் நேரம்தானே
மஞ்சம் ஒன்று போடலாமே

தரையை  தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்து  செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம்தானே
அன்பு பட்டு பேசலாமே

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி


No comments:

Post a Comment