பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
படம் : வீர அபிமன்யு (1965)
பாடியவர்கள் : பி.பீ.ஸ்ரீநிவாசன் - பி.சுசீலா
இசையமைப்பாளர் : கே.வி.மகாதேவன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
வசனம் : தலைவர் கலைஞர்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
கொடித் தேன் இனியங்கள் குடித்தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
கொடித் தேன் இனியங்கள் குடித்தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
துளித் தேன் சிந்தாமல் களித்தேன்
ஒரு துளித் தேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில் அணைத்தேன் அழகினை இரசித்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
உனை தேன் என நான் நினைத்தேன்
அந்த மலை தேன் இவரென மலைத்தேன்
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன்
உனக்கென வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன்
உனக்கென வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
இனித் தேன் இல்லாதபடி கதை முடித்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைந்தேன்
உலகத்தை நான் இங்கு மறந்தேன்
நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைந்தேன்
உலகத்தை நான் இங்கு மறந்தேன்
உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்
உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
உனை தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
No comments:
Post a Comment