Thursday, 15 May 2014

தேன் தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன் - குருவி (2008)



தேன் தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன்
படம் : குருவி (2008)
பாடியவர்கள் : உதித் நாராயணன் - ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
இயற்றியவர் : யுகபாரதி

தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர்த் தீயை அளந்தேன்
சிவந்தேன்

தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண பயந்தேன்
கரைந்தேன்

என்னவோ சொல்லத் துணிந்தேன்
ஏதேதோ செய்யத் துணிந்தேன்
உன்னோட சேரத்தானே நானும் அலைந்தேன்
தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர்த் தீயை அளந்தேன்
சிவந்தேன்;

அள்ளவரும் கையை ரசித்தேன்
ஆளவரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்

முட்ட வரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்

நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
இதழ் துள்ளாததையும் ரசித்தேன்

நீ செய்யும் யாவும் ரசித்தேன்
நித்தம் செய்யாததையும் ரசித்தேன்
உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன்

தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர்த் தீயை அளந்தேன்
சிவந்தேன்

சேலையில் நிலவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்

திருடனே உன்னை அறிந்தேன்
திருடினாய் என்னை அறிந்தேன்
இன்னும் நீ திருடத்தானே ஆசை அறிந்தேன்

என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்

ஆண் தென்றல் உன்னை அறிந்தேன்
அதில் கூசும் பெண்மை அறிந்தேன்

நீ நடமாடும் திராட்சைத் தோட்டம்
எதிரில் அறிந்தேன்

தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர்த் தீயை அளந்தேன்
சிவந்தேன்

தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண பயந்தேன்
கரைந்தேன்

No comments:

Post a Comment