Monday, 5 May 2014
ரகசியமானது காதல் - கோடம்பாக்கம் (2006)
இரகசியமானது காதல் மிகமிக
படம் : கோடம்பாக்கம் (2006)
பாடல் : விஜய் சாகர்
பாடியவர்கள் : ஹரிணி - ஹரிஷ் இராகவேந்திரா
இசை : சிற்பி
இரகசியமானது காதல்
மிக மிக இரகசியமானது காதல்
இரகசியமானது காதல்
மிக மிக இரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
ஸ்வாரசியமானது காதல்
மிக மிக ஸ்வாரசியமானது காதல்
சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மரபானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை,வெளிச்சத்தை போல
அது சுதந்தரமானது அல்ல
ஈரத்தை இருட்டினை போல
அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல
இரகசியமானது காதல்
மிக மிக இரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
ஸ்வாரசியமானது காதல்
மிக மிக ஸ்வாரசியமானது காதல்
கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிரானது
கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினைப் போல
விரல் தோடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல
அதை உயிரினில் உணரனும் மெல்ல
இரகசியமானது காதல்
மிக மிக இரகசியமானது காதல்
இரகசியமானது காதல்
மிக மிக இரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
ஸ்வாரசியமானது காதல்
மிக மிக ஸ்வாரசியமானது காதல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment