Sunday, 4 May 2014

ஒரு நாளிலே உறவானதே.. - சிவந்தமண்



ஒரு நாளிலே உறவானதே..
படம் : சிவந்தமண்  (1969)
பாடியவர்கள் : டி எம் சௌந்தரராஜன் - பி. சுசீலா
பாடலாசிரியர் : கவியரசு கண்ணதாசன்
இசையமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன் 
 
ஒரு நாளிலே...என்னவாம்...உறவானதே...தெரியுமே...
கனவாயிரம்...நினைவானதே...
வா வெண்ணிலா...வா வெண்ணிலா இசையோடுவா
மழை மேகமே அழகோடு வா
மஹராணியே மடிமீது வா (2)
வந்தால்...அணைக்கும்...சிலிர்க்கும்...ம்ஹ்ம்ம் துடிக்கும்...

நாளை வரும் நாளை என நானும் எதிர்பார்த்தேன்
காலம் இது காலம் எனக் காதல் மொழி கேட்டேன்
போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும் (2)
போதும் எனக் கூறும்வரை பூவே விளையாடு
வரும் நாளெல்லாம் இது போதுமே (2)

மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு
கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு
தஞ்சம் இது தஞ்சம் எனத் தழுவும் சுவையோடு (2)
மிஞ்சும் சுகம் யாவும் வரவேண்டும் துணையோடு
வரும் நாளெல்லாம் இது போதுமே (2)

(ஒரு நாளிலே)

No comments:

Post a Comment