Tuesday, 6 May 2014

தொட்டால் பூ மலரும் - படகோட்டி (1964)



தொட்டால் பூ மலரும்
இன்றைய இசைத் தென்றல்..
படம்: படகோட்டி (1964)
பாடியவர்கள்: பி.சுசிலா - டி.எம்.சௌந்திர ராஜன்
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
இயற்றியவர் : வாலி 

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை
நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை
ஹோய் ஆசை விடுவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஓ.. இளமை முடிவதில்லை
எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஓ பொழுதும் விடிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன் ஆஆஆஆ…

பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை ஹோய் பித்தம் தெளிவதலில்லை
வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல்
சுவர்க்கம் தெரிவதில்லை ஓ சுவர்க்கம் தெரிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்
பாவை முகமல்லாவா ஹோய் பாவை முகமல்லவா
அழகிய தோள்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன் ஆஹாஆஹா…

No comments:

Post a Comment