ஞாயிறு போற்றுதும்..ஞாயிறு போற்றுதும்..
இனிய ஞாயிறு காலை வணக்கம்..
என்ன நட்புகளே இன்று முதல் தமிழ்நாட்டில்
எங்கு பார்த்தாலும் "காஜல் அகர்வால்" வருகையாமே..
அதாங்க "தடையில்லா மின்சாரமாமே"..
எப்புடின்னு கேட்குறீங்களா?...
சமீபத்தில் வெளி வந்த படங்களில் தடையில்லா மின்சாரமாக,
காஜல் அகர்வாலை உருவகப்படுத்திய கவிஞர்கள்..
"ஜில்லா" திரைப் படத்தில் கவிஞர் வைரமுத்து,
"கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு"
பாடலில், காஜலை வர்ணித்து எழுதிய வரிகள்..
"தடையில்லா மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே.." எனவும்..
அதே போல், "ஆல் இன் ஆல் அழகுராஜா"
திரைப் படத்தில் கவிஞர் நா.முத்துக்குமார்,
"யாருக்கும் சொல்லாம.."
பாடலில், காஜலை வர்ணித்து எழுதிய வரிகள்..
"தடையில்ல மின்சாரம் போல்
தினந்தோறும் வந்தாயே.." எனவும்..
அப்ப "தடையில்லா மின்சாரம்" நம்ம காஜல்
பொண்ணுதானே..
No comments:
Post a Comment