இனிய நற்காலை வணக்கம்..
நேற்று மாலை ஒரு நண்பர், (மாற்றுக்
கட்சியைச் சார்ந்தவர்), கிண்டலாக என்னிடம்,
"என்னங்க?.. உங்க கட்சி இப்படித் தோற்றுப்
போச்சேன்னு?" கேட்டார்..
நான் உடனே ஏங்க, "உங்கத் தலைவி ஜெயலலிதா தலைமயிலான கூட்டணி கடந்த 2004 நாடாளுமன்றத்தேர்தலில் - போட்டியிட்ட புதுவை உள்ளிட்ட 40 தொகுதி களிலும் படுதோல்வி அடைந்தது. அப்போது அவர் - தேர்தல் தீர்ப்புக் குறித்துக் கருத்து தெரிவித்த ஜெலலிதா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ""ஜனநாயகப் படுகொலை நடந்ததாகவும், மோசடித் தனத்தில் விளைந்த வெற்றி"" என்றும் அராஜக உணர்வோடு மக்கள் தீர்ப்பைக் காலில் போட்டு மிதிக்கிற வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.

தலைமைச்செயலகத்தில் நிருபர்களைச் சந்தித்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து கருத்துக் கூறும்போது, ""எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் நடந்த பெரிய அளவிலான தில்லு முல்லுதான் எங்களது தோல்விக்குக் காரணம். சில கருவிகள் என்னிடம் காட்டப்பட்டன. செயல்முறையும் செய்துகாட்டப்பட்டது. நீங்கள் எந்தக் கட்சி சின்னத்தில் பட்டனை அழுத்தினாலும், இது உதய சூரியன் சின்னத்துக்கே பதிவாகி இருக்கிறது. இதேபோல பல தில்லு முல்லுகள் நடந்துள்ளன. இதைப் போன்ற தேர்தல் தில்லு முல்லுகளை ஒழிக்க வேண்டுமென்றால் நாம் பழைய வாக்குப் பெட்டியில் வாக்குச்சீட்டுகளைப் போட்டு பதிவு செய்யும் முறையைப் பின்பற்ற வேண்டும்"" என்று கூறினார்.
மேலும், ""நிருபர்கள் ""கடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு நீங்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள்?"" என்று கேட்டதற்கு ஜெயலலிதா, ""2001 சட்டமன்றத் தேர்தலில் என்னைத் தேர்தலில் நிற்கவிடாமல் சதி செய்துவிட்டதால் தேர்தலில் நிச்சயம் தோற்றுவிடுவார்கள் என்று தப்புக்கணக்கு போட்ட தி.மு.க.வினர் மெத்தனமாக விட்டுவிட்டார்கள். ஆனால் நான் கடுமையாக பட்டிதொட்டி எங்கும் பிரச்சாரம் செய்து வாக்குக் கேட்டு மகத்தான வெற்றியைப் பெற்றேன். இது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனவேதான், இந்தத் தேர்தலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன தில்லு முல்லு செய்ய வேண்டுமோ அதை செய்து முடித்துவிட்டார்கள்.
அதனால்தான் இந்தத் தேர்தல் முடிவு இப்படி அமைந்துவிட்டது. "" என்று கூறினார். (தினத்தந்தி 23.7.2004). நாடாளுமன்றத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தேர்தல் ஆணையத்தைக் கொச்சைப் படுத்துகிற வகையில் கருத்துக் கூறியதோடு முதலமைச்சர் ஜெயலலிதா நிற்காமல், வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு செய்ய முடியும் என்பதை நிரூபிக்கத் தயார் என்று தேர்தல் ஆணையத்துக்கு அ.தி.மு.க. சார்பில் கடிதம் எழுதப்பட்டது.
இதில், ""தேர்தல் முடிந்த பிறகு இந்தக் கருவியைப் பாதுகாப்பான அறையில் வைப்பதைத் தடுக்க வேண்டும். ஏனெனில், ரிமோட் கண்ட்ரோல் முறையின் மூலம் சிலர் ஒரு கட்சிக்குச் சாதகமாக விழுந்த ஓட்டுகளை மற்றொரு கட்சிக்குச் சாதகமாகப் பதிவு செய்யும் வகையில் மாற்றிவிட முடியும் "" என்று குற்றச்சாட்டை எழுப்பி, ""அதை நிரூபிக்கத் தயார்"" என்று குறிப்பிட்டிருந்தார்". அதை கொஞ்சம் நினைச்சுப் பாருங்கோ..இப்ப நீங்க ப்ரவீன்குமாருடன் சேர்ந்து என்ன செய்தீர்களோ? என மக்கள் முணுமுணுக்கத் தொடங்கி விட்டனர் என்றேன்..அந்நபர் அதற்குப் பின், என் முன் நிற்க வில்லை..
No comments:
Post a Comment