கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்..
படம் : மதுர (2004)
பாடியவர்கள் : மது பாலகிருஷ்ணன் - சாதனா சர்கம்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
இயற்றியவர் : யுக பாரதி
கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்
இரு விழியினிலே அவன் அழகுகளை
மிக அருகினிலே அவன் இனிமைகளை
தின்றேன் தின்றேன்
தெவிட்டாமல் நான் தின்றேன்...
கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்..கொண்டேன்..
ஆ..ஆ..ஆ...
நீ வளையல் அணியும் கரும்பு
நான் அழகை பழகும் எறும்பு
ஆ., நீ தழுவும் பொழுதில் உடும்பு
நாள் முழுதும் தொடரும் குறும்பு
சுடிதாரை சூடிச்செல்லும் பூக்காடு
தொடும் போது தூறல் சிந்தும் மார்போடு
பகல் வேஷம் தேவையில்லை பாய்போடு
பலி ஆடு நானும் இல்லை தேன்கூடு
ஒரு விழி எரிமலை
மறு விழி அடைமழை பரவசம் உயிரோடு
மேல் இமைகள் விரதம் இருக்க
கீழ் இமைகள் பசியில் துடிக்க..
கால் விரலில் கலைகள் வசிக்க
கை விரலில் கலகம் பிறக்க
எனை மோதி போகும் தென்றல் தீ மூட்ட
இமையோரம் கோடி மின்னல் நீ காட்ட
தணியாத தாகம் உன்னை தாழ்ப் பூட்ட
கனவோடு நீயும் வந்து போர் மீட்ட
ஜனனமும் மரணமும்
பலமுறை வரும் - என்
தலையணை நினைவூட்ட
கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்
இரு விழியினிலே அவன் அழகுகளை
மிக அருகினிலே அவன் இனிமைகளை
தின்றேன் தின்றேன்
தெவிட்டாமல் நான் தின்றேன்...
No comments:
Post a Comment