Sunday, 4 May 2014

சில்லென ஒரு மழை துளி - ராஜா ராணி



சில்லென ஒரு மழை துளி...
படம்: ராஜா ராணி
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
வரிகள்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: அல்போன்ஸ் ஜோசப், கிளிடன் சிரிஜோ, ஜி.வி.பிரகாஷ் குமார்
சில்லென ஒரு மழை துளி...
இசைபல்லவி

ஆண்  :
சில்லென ஒரு மழைத் துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஹோ
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளாய் ஹோ
நான் மாறினேன் கண்ணே
ஓ... ஓ... ஓ... ஓ...

இசை சரணம் - 1

பெண்  :
அட கருப்பட்டியே என் சீனி கெழங்கே
சிரிச்சு கவுத்தாதே
என் கன்னுக் குட்டியே கம்மாக் கரையில நீ
கப்பல் ஓட்டாதே
கண்ணால பாக்காம 
கண்ணாலம் பண்ணலாமா
கை கோர்த்து போலாமா

சில்லென ஒரு மழைத் துளி 

ஆண்  :
கொஞ்சம்பார்த்து விடு
கொஞ்சம் பேசி விடு என்று என் விழிகள் 
ஹையையோ என்னை திட்ட
கோட கால மழை வந்து போன பின்னும்
சாலை ஓர மரம் தன்னாலே நீர் சொட்ட
என்னை தாக்கும் புயலே
இரவோடு காயும் வெயிலே

ஓஹோ உன்னாலே உன்னாலே 
நூலில்லா காற்றாடி ஆனேனே
அடி பெண்ணே அடி பெண்ணே 
நான் விழுந்தால் உன் பாதம் சேர்வேனே
உன் விழிகளிலே ஹோ
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளாய் ஹோ
நான் மாறினேன் கண்ணே

சில்லென ஒரு மழைத் துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே

இசை சரணம் - 2

ஆண்  :
சுந்தரிக் கின்னாரி மணிக் கொலுசு
தரி வள கிலு கிலு கிலுக்கு
கரி மின்னாரம் செறு பொன்னாரம்
இது மதுர மதுர கரிம்பு
கள வேணி ம்ருது பாணி
நின் ஹ்ருதய வனியில் என் கானம்
ஸ்வரமாயி ஜதியாயி 
எந்நுணருமோ எந்நறியான் மோஹம் ஆ... 

காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி
மீண்டும் நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா
கோபம் கொள்கையிலும் கிறங்க வைக்குதடி
மீண்டும் ஒரு முறை நீ கோபத்தில் பார்பாயா
ஆளை கொல்லும் அழகே
நிழல் கூட அழகின் நகலே
ஒரு நாளும் குறையாத புது போதை
கண் ஓரம் தந்தாயே
அணைத்தாலும் அணையாத ஒரு தீயாய்
நெஞ்சோரம் வந்தாயே

அடி இடம் வலமாய் நான் ஆடினேன் பெண்ணே
ஒரு இடி மழையாய் எனதாகினாய் முன்னே
ஓ... ஹோ ஓ... ஹோ ஹோ... ( இசை )

No comments:

Post a Comment