Sunday, 4 May 2014
ஞாயிறு என்பது கண்ணாக - காக்கும் கரங்கள்
ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக..
படம்: காக்கும் கரங்கள் (1964)
பாடியவர்கள் : டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா
பாடலாசிரியர் : கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்.. ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்.. ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
ஹ்ம்ஹ்ம்ஹ்ம்.. ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவைப் பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக

நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு

ஊருக்குத் துணையாய் நானிருக்க எனக்கொருத் துணையை எதிர்பார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழிக் கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழிக் கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு
முன்னொரு பிறவி எடுத்திருந்தேதேன் உன்னிடம் மனதைக் கொடுத்திருந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன் பேசிய பதிலைக் கொடுக்க வந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன் பேசிய பதிலைக் கொடுக்க வந்தேன்
ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment