Monday, 5 May 2014
மலை காற்று வந்து தழிழ் பேசுதே - வேதம் (2001)
மலை காற்று வந்து தழிழ் பேசுதே..
படம் : வேதம் (2001)
பாடியவர்கள் : ஹரிஹரன் - மகாலக்ஷ்மி அய்யர்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பாடலாசிரியர் : வைரமுத்து
மலை காற்று வந்து தழிழ் பேசுதே
மழைச்சாரல் வந்து இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி
மலைக்காற்று வந்து தமிழ் பேசினால்
மழைச்சாரல் வந்து இசை பாடினால்
மலரோடு வண்டு உரையாடினால்
உன்னோடு நானும் பேசுவேன்...
புல்லோடு இரவில் பனி தூங்குமே
சொல்லோடு கவியின் பொருள் தூங்குமே
கல்லோடு மறைந்து சிலை தூங்குமே
தூங்காது நமது தீபமே தூங்காது நமது தீபமே
கடல் கொண்ட நீலம் கரைந்தாலுமே
உடல் கொண்ட ஜீவன் போனாலுமே
முடியாத கண்டம் முடிந்தாலுமே
முடியாது நமது பந்தமே முடியாது நமது பந்தமே..
மலை காற்று வந்து தழிழ் பேசுமா?
மழைச்சாரல் வந்து இசை பாடுமா?
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி....
இடையோடு ரண்டு கரம் சேர்க்கிறேன்
என்னன்னவென்று சரி பார்க்கிறேன்
இதழ் தேனை மெல்ல ருசி பார்க்கிறேன்
இடை வேலை எல்லை தொடருதே
இடை வேலை எல்லை தொடருதே..
கண்ணாழன் தீண்ட மடி சாய்கிறேன்
கண்ணோரம் காதல் பசு பார்க்கிறேன்
என் கூந்தல் பூக்கள் பரிமாரினேன்
இனி என்ன செய்வதறிகிறேன் இனி என்ன ம்ம்ம்ம்ம் ...
மலை காற்று வந்து தழிழ் பேசுதே
மழைச்சாரல் வந்து இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி
ஆஆஆஆஆஆஆஆ....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment