Sunday, 4 May 2014

புது நாடகத்தில் ஒரு நாயகி - ஊட்டி வரை உறவு (1967)



புது நாடகத்தில் ஒரு நாயகி
படம் : ஊட்டி வரை உறவு (1967)
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கவியரசு கண்ணதாசன்..
நடிப்பு : நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - கே.ஆர்.விஜயா

புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு..ஓஹோ..ஓஹோ..
புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்

அகப்பட்டுக்கொண்டாள் மேடையிலே அந்தோ பரிதாபம்
அகப்பட்டுக்கொண்டாள் மேடையிலே அந்தோ பரிதாபம்
ஆடிய வேடம் கலைந்ததம்மா அடியேன் அனுதாபம்
ஆடிய வேடம் கலைந்ததம்மா அடியேன் அனுதாபம்
ஒத்திகையில் தூங்கிவிட்டாள் ஏன் ஏன் தெரியவில்லை
நித்திரையில் யாரை கண்டாள் அது நான் தான் எவருமில்லை
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்

மூச்சு விடாமல் பாடுகிறேன் முகத்தில் பாவமில்லை
மூச்சு விடாமல் பாடுகிறேன் முகத்தில் பாவமில்லை
முடிவு சொல்லாமல் ஓடுகிறாய் நீ பெண்ணா புரியவில்லை
வந்த இடம் நல்ல இடம் வந்தால் தெரிந்துவிடும்
அந்த சுகம் என்னவென்று வாழ்ந்தால் புரிந்துவிடும்
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு..ஓஹோ..ஓஹோ..
புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்

No comments:

Post a Comment