Sunday, 4 May 2014
நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே..
நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே..
படம் : ஜெயம்கொண்டான்
பாடலாசிரியர் : கவிஞர் யுகபாரதி
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பாடியவர்கள்: ஹரிஹரன் - மதுஸ்ரீ
நான் வரைந்து வைத்த
சூரியன் ஒளிருகின்றதே
நான் கடந்து சென்ற
மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற
காக்கைகள் மயில்களானதே
என் தலை நனைத்த
மழை துளி அமுதமானதே
நான் இழுத்து விட்ட
மூச்சிலே இசை கசிந்ததே (நான் வரைந்து)
ஜன்னல் கம்பி உந்தன்
கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே
கம்பஞ் சக்கை உந்தன்
கண்கள் தொட்டு தொட்டு
தங்கச் சிற்பம் என்று மாறியதே
ஜன்னல் கம்பி உந்தன்
கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே
கம்பஞ் சக்கை உந்தன்
கண்கள் தொட்டு தொட்டு
தங்கச் சிற்பம் என்று மாறியதே
பூக்கும் புன்னகையாலே
என் தோள்கள் இறக்கைகள் ஆக
நாக்கு உன் பெயர் கூற
என் நாள்கள் சக்கரை ஆக
தலைகீழ் தடு மாற்றம்
தந்தாய் என்னில்
என்கால் விண்ணில் (நான் வரைந்து)
ஹா ஆ ஆ ஹா ஆ ஆ ஆ ஆ அஹா....
பள்ளி செல்லவில்லை
பாடம் கேட்க வில்லை
அள்ளி கொள்ள மட்டும் நான் படித்தேன்
நல்ல முல்லை இல்லை
நாரும் கையில் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்
பள்ளி செல்லவில்லை
பாடம் கேட்க வில்லை
அள்ளி கொள்ள மட்டும் நான் படித்தேன்
நல்ல முல்லை இல்லை
நாரும் கையில் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்
ஊஞ்சல் கயிறில்லாமல்
என் ஊமை மனது ஆடும்
தூங்க இடமில்லாமல்
என் காதல் கனவை நாடும்
நொடியும் விலகாமல்
கொஞ்சும் கொஞ்சல்
தங்கும் நெஞ்சில் (நான் வரைந்து)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment