Monday, 5 May 2014
சிட்டுக்குருவி முத்தம் - புதிய பறவை (1964)
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே
அரை நூற்றாண்டுகள் கடந்தாலும் ரீங்காரமிடும் இனிய பாடல்..
படம் : புதியபறவை (1964)
பாடியவர் : பி.சுசீலா
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் -
டி.கே. இராமமூர்த்தி
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக்கண்டேனே
மொட்டு விரித்த மலரினிலே வண்டு மூழ்கிடக்கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக்கண்டேனே- நான்
(சிட்டுக்குருவி)
பறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே
பருவம் வந்தேன் தழுவ வந்தேன் பறவைத் துணை இல்லையே
எடுத்துச்சொல்ல மனம் இருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்..
(சிட்டுக்குருவி)
ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனாம்
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனாம்
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனாம்
இளமைத் தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனாம் ஹோய்..
(சிட்டுக்குருவி)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment