ஓராயிரம் முறை கேட்டாலும் சலிக்காத
ஓராயிரம் பார்வையிலே..
படம் : வல்லவனுக்கு வல்லவன்
பாடலாசிரியர் : கவியரசு கண்ணதாசன்
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எஸ்.வேதா
நூறுமுறை பிறந்தாலும் நூறுமுறை இறந்தாலும்
உனைபிரிந்து வெகு தூரம் நான் ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
உன்காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
இந்த மானிட காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
உன்காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
இந்த காற்றினில் நான் கலந்தேன் உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
உன்காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
No comments:
Post a Comment