Monday, 19 May 2014

சின்னவளை முகம் சிவந்தவளை நான் - புதியபூமி (1968)



சின்னவளை முகம் சிவந்தவளைநான்
படம் : புதியபூமி (1968)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

சின்னவளை முகம் சிவந்தவளை நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
சின்னவளை முகம் சிவந்தவளை நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு

வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
பூங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப் போல் பூப் போல் தொட்டு

தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை
மெல்லத் தொட்டால் தொட்டால் துவளும்
தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை
மெல்லத் தொட்டால் தொட்டால் துவளும்
பால் மழலை மொழி படித்தவளை
சுகம் பட்டால் பட்டால் படியும்

கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
இரு கண்ணால் சொன்னால் பக்கம்
வந்தால் தந்தால் நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ

வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு

வான மழைப் போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறப்பாய்
வான மழைப் போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறப்பாய்
நீ அவளை விட்டுப் போகும் வரை
அது இங்கே இங்கே இருக்கோ

மின்னும் கை வளை மிதக்கும்
பெண்களை அசைத்தால் அசையாதோ
மின்னும் கை வளை மிதக்கும்
பெண்களை அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று
பெண்ணைக் கெஞ்சும் வரை சுவைத்தால் சுவைக்காதோ

வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொண்டாய் வளையிட்டு
பூங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப் போல் பூப் போல் தொட்டு
சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொண்டேன் கரம் தொட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொண்டேன் வளையிட்டு


No comments:

Post a Comment