Sunday, 4 May 2014

ஊரு சனம் தூங்கிடுச்சு..



ஊரு சனம் தூங்கிடுச்சு..
படம் : மெல்ல திறந்தது கதவு (1986)
பாடியவர் : எஸ்.ஜானகி
இயற்றியவர் : இசைஞானி இளையராஜா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் - இளையராஜா

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு!
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே (2)

குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே!
மயிலு இளம் மயிலு மாமன் கவிக்குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே!
ஒன்ன எண்ணி நானே
உள்ளம் வாடிப் போனேன்!
கன்னிப் பொண்ணுதானே,
என் மாமனே என் மாமனே
ஒத்தையிலே அத்த மக
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலயே
காலம் நேரம் கூடலயே - ஊரு சனம்

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா!
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் ஏறாதா!
நெலாக் காயும் நேரம்
நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும்
இந்த நேரந்தான், இந்த நேரந்தான்
ஒன்ன எண்ணிப் பொட்டு வச்சேன்,
ஓலப் பாயை போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன ஏங்க ஏங்க வச்சான் - ஊரு சனம்



No comments:

Post a Comment