Monday, 5 May 2014
அன்புள்ள மான்விழியே - குழந்தையும் தெய்வமும் (1965)
அன்புள்ள மான் விழியே..
என்றும் இனிக்கும் சுகமான இராகம்..
படம்: குழந்தையும் தெய்வமும் (1965)
பாடியவர்கள்: டி.எம். சௌந்தர்ராஜன் - பி.சுசீலா
பாடலாசிரியர் : கவியரசு கண்ணதாசன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை !
அன்புள்ள மன்னவனே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதிவந்தேன் !
நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே
நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே
இளையகன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ
அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை
நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்
நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்
இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தளர்ந்தது நாணம் அல்லவா
வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா
வாடவைத்ததும் உண்மை அல்லவா
அன்புள்ள மன்னவனே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதிவந்தேன்
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை
உனக்கொரு பாடம் சொல்ல வந்தேன்
எனக்கொரு பாடம் கேட்டுக் கொண்டேன்
உனக்கொரு பாடம் சொல்ல வந்தேன்
எனக்கொரு பாடம் கேட்டுக் கொண்டேன்
பருவம் என்பதே பாடம் அல்லவா
பார்வை என்பதே பள்ளி அல்லவா
ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும்
இரவும் வந்தது நிலவும் வந்தது
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதிவந்தேன்
Subscribe to:
Post Comments (Atom)
இந்தப் பாடல் கவிஞர் வாலி அவர்களுடையது.
ReplyDeleteகவனிக்கவும்...