Sunday, 4 May 2014

என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்.



என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்..
படம் : இவன் வேற மாதிரி 
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார் 
பாடியவர்கள்  : சத்யா.சி  - மதுஸ்ரீ 
இசை : சத்யா.சி 
யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ
என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன் 
என்னை கேட்டேனே
உன்னை நினைக்க என்னை மறந்தேன் 
எல்லாம் மறந்தேனே
என் பேரை மறந்தேன் என் ஊரை மறந்தேன் 
என் தோழிகளை மறந்தேன் 
என் நடை மறந்தேனே என் ஓடை மறந்தேன்
என் நினைவினை மறந்தேன் 
அந்தி மாலை கோவில் மறந்தேன் 
அதிகாலை கோலம் மறந்தேன் 
ஏன் மறந்தேன் 
ஒ ஏன் என்னை மறந்தேன் 
நான் என்னை மறந்தேன் 

கண் திறந்தும் பார்க்க மறந்தேன் 
கால் நடந்தும் பாதை மறந்தேன் 
வாய் திறந்தும் பேச மறந்தேன் 
நான் பண்பலையின் பாடல் மறந்தேன் 
தினம் சண்டை போடும் தாயிடம் கெஞ்ச மறந்தேன் 
என் குட்டி தங்கை அவளிடம் கொஞ்ச மறந்தேன் 
மறந்தேன் மறந்தேன் எதனால் மறந்தேன் 

யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ 
யார் அவனோ அவனோ அவனோ

படித்ததெல்லாம் பாதி மறந்தேன் 
தேர்வறையில் மீதி மறந்தேன் 
நாள் கிழமை தேதி மறந்தேன் 
நான் மின்னஞ்சலின் சேதி மறந்தேன் 
நான் என்னை பற்றி அவனிடம் சொல்ல மறந்தேன் 
அவன் புன்னகையை மூட்ட கட்டி அள்ள மறந்தேன் 
மறந்தேன் மறந்தேன் அவனால் மறந்தேன் 

யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ
ஏன் என்னை மறந்தேன் 

No comments:

Post a Comment