சொல்லித்தரவா சொல்லித்தரவா
படம் : மஜா (2005)
பாடியவர்கள் : சாதனா சர்கம் - மது பாலகிருஷ்ணன்
இசை : வித்யாசாகர்
சொல்லித்தரவா சொல்லித்தரவா
மெல்ல மெல்ல வா வா வா அருகே..
அள்ளித்தரவா அள்ளித்தரவா
அள்ள அள்ள தீராதே அழகே..
உன்னை நினைத்தேன் நித்தம் தவித்தேன்
தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே
அள்ளித்தரவா அள்ளித்தரவா
அள்ள அள்ள தீராதே அழகே
ல.ல..லா..ந.ந...நா..
காதல் தொட்டில் பழக்கம்
நீளும் கட்டில் வரைக்கும்
காமன் வீட்டுத் தாழ் திறக்கும்
ஆண் பெண் உள்ள வரைக்கும்
காதல் கண்ணை மறைக்கும்
தீயில் கூட தேனிருக்கும்
காதல் மழை தூறுமே கட்டில் கப்பல் ஆடுமே
பெண்மை தடுமாறுமே மானம் கப்பலேறுமே
ஏட்டுப்பாடங்கள் ஏதும் இல்லாத வீட்டுப் பாடம் இது
சொல்லித்தரவா.. சொல்லித்தரவா
மெல்ல மெல்ல வா வா வா அருகே
அள்ளித்தரவா..வா.வா..அள்ளித்தரவா
அள்ள அள்ள தீராதே அழகே
ஆசை யாரை விட்டது நாணம் கும்மி கொட்டுது
மோகம் என்னும் முள் தைத்தது
வார்த்தை உச்சுக் கொட்டுது பார்வை பச்சைக் குத்துது
தேகம் எங்கும் தேள் கொட்டுது
பார்வை என்னைத் தீண்டுமே கைகள் எல்லைத் தாண்டுமே
பூவைத் தொடும் நேரமே புத்தி மாறிப் போகுமே
இங்கே என் காதில் சொல்லும் எல்லாமே
எங்கே நீ கற்றது
சொல்லித்தரவா.... ஹா..... சொல்லித்தரவா
மெல்ல மெல்ல வா வா வா அருகே
அள்ளித்தரவா.. அள்ளித்தரவா
அள்ள அள்ள தீராதே அழகே
உன்னை நினைத்தேன் நித்தம் தவித்தேன்
தள்ளித் தள்ளி போகாதே உயிரே..
No comments:
Post a Comment