Monday, 5 May 2014
இரகசியக் கனவுகள் - படம் : பீமா (2008)
இரகசியக் கனவுகள்
படம் : பீமா (2008)
பாடலாசிரியர் : கவிஞர் யுகபாரதி
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்.
பாடியவர்கள்: ஹரிஹரன் - மதுஸ்ரீ
இரகசியக் கனவுகள்
ஜல் ஜல் – என்
இமைகளைக் கழுவுது
சொல் சொல்
இளமையில் இளமையில்
ஜில் ஜில் – என்
இருதயம் நழுவுது
செல் செல்
முதல் பிழை போல் மனதினிலே
விழுந்தது உனதுருவம் – ஓ
உதடுகளால் உனைப் படிப்பேன்
இருந்திடு அறை நிமிடம்
தொலைவதுபோல் தொலைவதுதான்
உலகில் உலகில் புனிதம்
இறகே இறகே
மயிலிறகே – வண்ண
மயிலிறகே வந்து தொடு அழகே
தொடத் தொடத் தொடர்கிற
சுகம் சுகமே – கண்
படப் படப் புதிர்களும் அவிழ்ந்திடுமே
குயிலினமே குயிலினமே
எனக்கொரு சிறகு கொடு
முகிலினமே முகிலினமே
முகவரி எழுதிக் கொடு
அவனிடமே அவனிடமே
எனது கனவை அனுப்பு
மறுபடி ஒருமுறை
பிறந்தேனே
விரல் தொடப் புருவமும்
சிவந்தேனே
இல்லாத வார்த்தைக்கும்
புரிகின்ற அர்த்தம் நீ
சொல்லாத இடமெங்கும்
சுடுகின்ற முத்தம் நீ
சுடும் தனிமையை உணர்கிற
மரநிழல் போல – எனைச் சூழ
நரம்புகளோடு குறும்புகள் நாளும்
எழுதியக் கணக்கு
எனதிரு கைகள் தழுவிட நீங்கும்
இருதயச் சுளுக்கு
உயிரணு முழுவதும்
உனைப் பேச.. உனைப் பேச
இமை தொடும் நினைவுகள் அனல் வீச..அனல் வீச
நெனச்சாலே செவப்பாகும்
மருதானித் தோட்டம் நீ
தலைவைத்து நான் தூங்கும்
தலகாணிக் கூச்சம் நீ
எனதிரவினில் கசிகிற
நிலவொளி நீயே – படர்வாயோ
நெருங்குவதாலே நொறுங்கிவிடாது
இருபது வருடம்
தவறுகளாலே தொடுகிற நீ ஓர்
அழகிய மிருகம்
இரகசியக் கனவுகள்
ஜல் ஜல் – உன்
இமைகளைக் கழுவுது
சொல் சொல்
இளமையில் இளமையில்
ஜில் ஜில் – என்
இருதயம் நழுவுது
சொல் சொல்
குயிலினமே குயிலினமே
எனக்கொரு சிறகு கொடு
முகிலினமே முகிலினமே
முகவரி எழுதிக் கொடு
அவனிடமே அவனிடமே
எனது கனவை அனுப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment