Sunday, 4 May 2014
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லத்தான் நினைக்கிறேன் என்றும் இனிய பாடலை...
படம் : சொல்லத்தான் நினைக்கிறேன் (1973)
பாடியவர்கள்: மெல்லிசை மன்னர், எஸ். ஜானகி
பாடலாசிரியர்: கவிஞர் வாலி
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
எம்.எஸ்.வீ.:
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தை இன்றி தவிக்கிறேன்
ஆஹா! சொல்லத்தான் நினைக்கிறேன்
ஜானகி:
காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
மனவீடு, அவன் தனி வீடு
அதில் புகுந்தானோ? எங்கும் நிறைந்தானோ?
அதில் புகுந்தானே, எங்கும் நிறைந்தானே
ஆஹோ! சொல்லத்தான் நினைக்கிறேன்
எம்.எஸ்.வீ.:
காதல் என்பது மழையானால்
அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட, நான் பாராட்ட
அவள் வருவாளோ? இல்லை மறப்பாளோ?
அவள் வருவாளே, சுகம் தருவாளே
ஆஹா! சொல்லத்தான் நினைக்கிறேன்
ஜானகி:
ஆசை பொங்குது பால் போலே
அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம்
அவன் அணைப்பானோ? என்னை நினைப்பானோ?
அவன் அணைப்பானே, என்னை நினைப்பானே
ஆஹோ! சொல்லத்தான் நினைக்கிறேன்
எம்.எஸ்.வீ.:
நேரில் நின்றால் ஓவியமாய்
என் நெஞ்சில் நின்றாள் காவியமாய்
நான் பாதி, அவள் தான் பாதி
எனக் கலந்தாளோ? கண்ணில் மலர்ந்தாளோ?
நெஞ்சில் கலந்தாளே, கண்ணில் மலர்ந்தாளே
எம்.எஸ்.வீ. & ஜானகி (ஆஹா! சொல்லத்தான் நினைக்கிறேன்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment