இதுவரை நீங்கள் பார்த்த..
ஐம்பது ஆண்டுகள் கடந்தும் மனதை வருடும் பாடல்..
படம் : பணக்கார குடும்பம் (1964)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன் - டி.கே. ராமமூர்த்தி
ஹோய் ஹொய்ஹோய் ஹொய்ஹொய்ஹோய்
இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா?
இப்படியென்று சொல்லியிருந்தால் தனியே வருவேனா?
ஹோய் ஹொய்ஹோய் ஹொய்ஹொய்ஹோய்
இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா?
இப்படியென்று சொல்லியிருந்தால் தனியே வருவேனா?
சொல்லில் விளங்காத எழுத்தில் அடங்காத சுகத்தை அறிந்தாயோ?
தூக்கம் வளராமல் பாக்கித் தெரியாமல் ஏக்கம் அடைந்தாயோ?
ஹோய் ஹொய்ஹோய் ஹொய்ஹொய்ஹோய்
அதுவரை வந்தால் போதும் போதும் அடுத்தது என்னம்மா?
ஆரத்தி நேரம் மணவறைக் கோலம் வருமா? சொல்லம்மா..
கைதானா இது நெருப்பா கனிந்துவிட்டாள் என்ற நினைப்பா?
கைதானா இது நெருப்பா கனிந்துவிட்டாள் என்ற நினைப்பா?
அனுபவமில்லாத மனதில் கொஞ்சம் அமைதி அமைதி அமைதி
கொஞ்சம்.......
நில்லாதே அந்த நிலவு வெறும் நினைவில் வருமோ உறவு?
நில்லாதே அந்த நிலவு வெறும் நினைவில் வருமோ உறவு?
சில்லென்ற மனதில் துடிப்பு கொஞ்சம் அருகே அருகே அருகே
கொஞ்சம்........
ஹோய் ஹொய்ஹோய் ஹொய்ஹொய்ஹோய்
அதுவரை வந்தால் போதும் போதும் அடுத்தது என்னம்மா?
ஆரத்தி மேளம் மணவறைக் கோலம் வருமா? சொல்லம்மா..
அம்மம்மா இது கொடுமை நான் அறியாதிருந்த புதுமை
அம்மம்மா இது கொடுமை நான் அறியாதிருந்த ஹஹஹ
பேச முடியாத பெருமை இந்த இனிமை இனிமை இனிமை
இந்த......
எங்கெங்கோ நான் பறந்தேன் ஒரு இளமை விருந்தில் இருந்தேன்
எங்கெங்கோ நான் பறந்தேன் ஒரு இளமை விருந்தில் இருந்தேன்
கண்களை மீண்டும் திறந்தேன் சுகம் கண்டேன் கண்டேன் கண்டேன்
சுகம்....
ஹோய் ஹொய்ஹோய் ஹொய்ஹொய்ஹோய்
இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா?
இப்படியென்று சொல்லியிருந்தால் தனியே வருவேனா?
ஹோய் ஹொய்ஹோய் ஹொய்ஹொய்ஹோய்
அருமையான பாடல். MGR- SAROJADEVI chemistry is excellently portrayed in this song. Saro's churidhar is good. 47-years old MGR's face is quite appealing and fresh. Hats off to Mr. Gandhi Karunanidhi for rendering verbatim presentation of this song.
ReplyDelete